தமிழ்ச்சரத்தை மேம்படுத்த இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்துகொள்ளுங்கள் !!
Sunday, June 21, 2020
Sunday, June 7, 2020
கூகுள் பிளாகர் தளம் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு..
பிளாகர் தளம் (.blogspot.com) பயன்படுத்துபவர்கள் கீழ்கண்ட அறிவிப்பை உங்கள் தளங்களில் பார்த்திருப்பீர்கள்.
ஆமாம், கூகுள் தனது பிளாகர் தளத்தை மேம்படுத்தி இருக்கிறது. அந்த மேம்பட்ட புதிய வடிவமைப்பை ஜூன் மாத இறுதியில் அனைவருக்கும் தர இருக்கிறது.
இந்தப் புதிய வடிவமைப்பைப் பெற நீங்கள் இந்த மாத இறுதி வரைக் காத்திருக்க வேண்டியதில்லை. ஆர்வமிருந்தால், நீங்கள் இப்போதே நேரடியாக “புதிய பிளாகரை முயற்சிக்கவும்” (Try the new Blogger) என்பதைச் சொடுக்கி முயன்று பார்க்கலாம்.
உங்களுடைய வலைப்பதிவு அனுவபத்தை எளிதாக்க புதிய பொலிவுடன் வந்திருக்கும் இந்த வடிவமைப்பில் கீழ்கண்ட பகுதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.
- புள்ளிவிவரங்கள் (Stats)
- கருத்துரைகள் (Comments)
- இடுகைகள் (Posts)
- எடிட்டர் (Editor)
- வாசிப்புப் பட்டியல் (Reading List)

முக்கியமாக, இது பிளாகர் தளத்தை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. அதனால், இந்தப் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பை அனைவரும் கண்டிப்பாக விரும்புவார்கள்.
விரும்பாத பட்சத்தில், நீங்கள் பழைய பிளாகருக்கு திரும்பும் வசதியையும் (Revert to legacy Blogger) கூகுள் தற்போதைக்குத் தருகிறது. ஆனால், கூகுள் விரைவில் தனது பழைய பிளாகரை நிறுத்த முடிவு செய்யலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
கூகுளின் இந்தப் புதிய முயற்சி என்பது வலைப்பூக்களில் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு ஓர் உற்சாகமூட்டும் செய்தி, அத்தோடு இது சரியான திசையை நோக்கிய ஒரு பயணமும் கூட.
குறிப்பு -
Subscribe to:
Posts (Atom)