Thursday, December 31, 2020

2021- ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் !!

கடந்த 2020-ஆம் ஆண்டு என்பது பலருக்கு வீட்டுச்சிறை கிடைத்த ஆண்டு. பெருந்தொற்று  கொரானாவால் அனைவரும்  வீட்டில் முடங்க வேண்டியதொரு கட்டாயம். வீட்டில் இருந்தபடியே வேலை, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. திட்டமிட்டிருந்த பயணங்கள் ரத்து, இரத்த உறவுகளின் மரணத்துக்குக் கூட பயணிக்க முடியாத துயரம் எனச் சமூக ஏற்றத்தாழ்வின்றி   நமது பொறுமை சோதிக்கப்பட்டிருக்கிறது.


பால்,  பிரெட், முட்டை போன்ற அத்தியாவசியங்களுக்குக் கூட ஓடு !  வாங்கு, பதுக்கி வை ! என்பது ஒருபுறம் என்றால் மறுபுறம் முகமுடி அணிவது, சமூக இடைவெளி, கிருமி நாசினி, இணையவழிப் பள்ளி, சூம், நெட்பிளக்ஸ்  என புதிய வாழ்க்கைக்கு வாழ பழகி இருக்கிறோம். 

2021-இல் நோய்.நொடி விலகி நிலைமை கொஞ்சமேனும் சீரடையும் எனும் நம்பிக்கை இருக்கிறது.

ஆங்கிலப் புத்தாண்டு அனைவருக்கும் புத்துணர்வு தரும் ஆண்டாக மலர  வாழ்த்துகள் !!

 நன்றி- படம் இணையம்.

Thursday, December 17, 2020

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021

அரூ - இணைய இதழ் மூன்றாவது ஆண்டாக,  2021-ஆம் ஆண்டுக்கான அறிவியல் சிறுகதைப் போட்டியை  அறிவித்திருக்கிறது. போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்கு தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்குகிறது.


அரூபம் (உருவமற்ற தன்மை) எனும் சொல்லின் சுருங்கிய வடிவமே 'அரூ'.  அவர்கள் நடத்தும் இந்தப் போட்டியின் விதிமுறைகள் மற்றும் மேலதிக தகவல்களை  https://aroo.space/contest-2021/ என்ற தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

அறிவியல் கதை எழுதும் ஆர்வமுள்ள நண்பர்கள் உடனடியாக களத்தில் இறங்கி வெல்லுங்கள். கதைகளை அனுப்பவேண்டிய இறுதிநாள் 1 மார்ச் 2021.  வாழ்த்துகள்!

Monday, December 7, 2020

அமேசான் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ (pentopublish) போட்டி

அமெசான் நிறுவனம், இந்த ஆண்டுக்கான Kindle Pen to Publish மின்னூல் போட்டியை அறிவித்திருக்கிறது. இதை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் எழுதலாம்.

முதல் பரிசு ரூ. 5 லட்சம், இரண்டாவது பரிசு 1 லட்சம், மூன்றாவது பரிசு 50 ஆயிரம்.  அளவில் சிறிய நூல்களுக்கு தனிப் பிரிவு, தனிப் பரிசுகள் உண்டு. போட்டியில் பங்குபெற அனுமதி இலவசம்.

இந்த ஆண்டு டிசம்பர் 10-இல் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் 10வரை (10-Mar-2021) நேரம் இருக்கிறது. எழுதும் நண்பர்கள் களத்தில் இறங்குங்கள், வெல்லுங்கள், வாழ்த்துகள்!

 மேலதிக விவரங்கள் அறிய அமேசான் தளம்- https://www.amazon.in/pen-to-publish-contest/b?ie=UTF8&node=13819037031

டிவிட்டர் குறிச்சொல் - #pentopublish

Wednesday, September 2, 2020

பாரதி திருவிழா - 2020 - சிறுகதைப்போட்டி

வானவில் பண்பாட்டு மையம், சென்னை  "பாரதி திருவிழா-2020" எனும் தலைப்பில் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கிறது.


 


படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: செப் 30 2020.

மேலதிக விவரங்களுக்கு..

 https://www.senkani.com/2020/08/vanavilculturalcentre-story.html

 

 

Wednesday, August 5, 2020

செய்தி அலை நடத்தும் சிறுகதைப் போட்டி!

செய்தி அலை (இணைய இதழ்) தனது வாசகர்களின் எழுத்துத் திறனை வெளிக்கொணரும் வகையில் ஒரு சிறுகதைப் போட்டியை நடத்துகிறது.
மேலதிக விவரங்கள் கீழே.

Sunday, August 2, 2020

தமிழ்க்குரல் - சிறுகதைத் தேடல்

தமிழ்க்குரலின் இளம் எழுத்தாளர்களுக்கான சிறுகதைத் தேடல்



மின்னஞ்சல்: info@thamilkural.net

Sunday, July 12, 2020

சிறுவாணி வாசகர் மையம்- ரா.கி. ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி-2020

சிறுவாணி வாசகர் மையம் நடத்தும் "ரா.கி. ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி-2020 ". 

உங்கள் படைப்புகளை அனுப்பவேண்டிய இறுதிநாள் செப்டம்பர்-30-2020.


Wednesday, July 8, 2020

யாவரும் பப்ளிஷர்ஸ் -புதுமைப்பித்தன் நினைவு பரிசுப்போட்டி..

புதுமைப்பித்தன் நினைவு பரிசுப்போட்டி... படைப்புகளை அனுப்பவேண்டிய இறுதி நாள் 31.07.2020



மேலும் விவரங்களுக்கு..www.yaavarum.com/

Sunday, June 7, 2020

கூகுள் பிளாகர் தளம் பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு..

பிளாகர் தளம் (.blogspot.com) பயன்படுத்துபவர்கள் கீழ்கண்ட அறிவிப்பை உங்கள் தளங்களில் பார்த்திருப்பீர்கள்.


ஆமாம்,  கூகுள் தனது பிளாகர் தளத்தை மேம்படுத்தி இருக்கிறது. அந்த மேம்பட்ட புதிய வடிவமைப்பை ஜூன் மாத இறுதியில் அனைவருக்கும் தர இருக்கிறது. 

இந்தப் புதிய வடிவமைப்பைப் பெற நீங்கள் இந்த  மாத இறுதி வரைக் காத்திருக்க வேண்டியதில்லை.  ஆர்வமிருந்தால், நீங்கள்  இப்போதே நேரடியாக “புதிய பிளாகரை முயற்சிக்கவும்” (Try the new Blogger) என்பதைச் சொடுக்கி முயன்று பார்க்கலாம்.

உங்களுடைய வலைப்பதிவு அனுவபத்தை எளிதாக்க புதிய பொலிவுடன் வந்திருக்கும் இந்த வடிவமைப்பில் கீழ்கண்ட பகுதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன.

  •     புள்ளிவிவரங்கள் (Stats)
  •     கருத்துரைகள் (Comments)
  •     இடுகைகள் (Posts)
  •     எடிட்டர்  (Editor)
  •     வாசிப்புப் பட்டியல் (Reading List)

முக்கியமாக, இது பிளாகர் தளத்தை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. அதனால்,  இந்தப் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பை அனைவரும் கண்டிப்பாக விரும்புவார்கள்.

விரும்பாத பட்சத்தில், நீங்கள் பழைய பிளாகருக்கு திரும்பும் வசதியையும் (Revert to legacy Blogger) கூகுள் தற்போதைக்குத் தருகிறது. ஆனால்,  கூகுள் விரைவில் தனது பழைய பிளாகரை நிறுத்த முடிவு செய்யலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.


கூகுளின் இந்தப் புதிய முயற்சி என்பது வலைப்பூக்களில் தொடர்ந்து இயங்குபவர்களுக்கு ஓர் உற்சாகமூட்டும் செய்தி,  அத்தோடு இது  சரியான திசையை நோக்கிய ஒரு பயணமும் கூட.


குறிப்பு -
  • இது தொடர்பான கூகுளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • பதிவர் திண்டுக்கல் தனபாலனின் வழிகாட்டுதல் பதிவு

Saturday, May 16, 2020

சித்திரைத் திருநாள் கட்டுரைப்போட்டியில் வென்றவர்கள் - சிறிய அறிமுகம்


சித்திரைத் திருநாள் 2020 கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்கள் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.



முதல் பரிசு பெற்ற ரம்யாவின் முழுப்பெயர் ரம்யா ரவீந்திரன். சொந்த ஊர் கடலூர். கடந்த 20  ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவரும் ரம்யா ஐ.டி.
துறையில் பணிபுரிகிறார்.

பச்சை மண்ணு பக்கம் எனும் தனது
வலைத்தளம் வழியாக  சிறுகதை
,கவிதை,கட்டுரை எனத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

தனது எழுத்துடன்  அமெரிக்காவில் இயங்கும் தமிழ்ப்பள்ளியில் பகுதி நேர தமிழாசிரியர், பரதக் கலைஞர் என பல தளங்களில் இயங்கும் இவர் தமிழ் மீதும் தமிழர் கலைகள் மீதும் தீராத ஆர்வம் கொண்டவர். வாழ்த்துகள் ரம்யா !! தொடர்ந்து எழுதுங்கள்.


இரண்டாம் பரிசு பெற்ற  ஆரூர்மூனா-வின் இயற்பெயர் செந்தில்குமார்.
சொந்த ஊர் திருவாரூர். தற்போது சென்னையில் மத்திய அரசுப்பணியில் இருக்கும் மூனா தனது
தோத்தவண்டா வலைத்தளம்,  முகநூல் வழியாக  திரைவிமர்சனம், அனுபவக் கட்டுரைகள், உணவுக் கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவரான மூனா தற்போது ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடருக்கு வசனமும் எழுதி வருகிறார். வாழ்த்துகள் மூனா !




மூன்றாம் பரிசு பெற்ற முரளியின் சொந்த ஊர் மதுராந்தகம். தற்போது சென்னையில் மாநில அரசுப்பணியில் இருக்கும் முரளி மூங்கில்காற்று எனும் வலைப்பூவில் 2011 இல் இருந்து எழுதி வருகிறார்.

கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் முரளி எழுத்து சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார். வாழ்த்துகள் முரளி !!



மூன்றாம் பரிசு பெறும் மற்றோரு வலைப்பதிவர் திருவாரூர் சரவணா.  தொழில் முனைவரான சரவணா தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வலைத்தளங்களில் எழுதிவருகிறார்.

வெகுஜன இதழ்களில் சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் எழுதிவரும் சரவணா பல
போட்டிகளில் பரிசுகளையும் வென்றிருக்கிறார்.  தமிழ்ச்சரத்தின் மலர்ச்சியால் தனது தளத்திற்கான  வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறும் சரவணனுக்கு திரைத்துறையிலும் கொஞ்சம் அனுபவம் உண்டு.  வாழ்த்துகள் சரவணன் !!





Sunday, May 10, 2020

சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி - முடிவுகள்


தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) நடத்திய சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி (2020) முடிவுகள் பற்றிய அறிவிப்பு.

இந்தப் போட்டிக்கு "உறவுகள் - என் பார்வையில்"
, "அன்றாட வாழ்வில் நகைச்சுவை" எனும் இரண்டு பிரிவுகளில் கட்டுரைகள் வரவேற்க்கப்பட்டிருந்தன.

இந்த இரண்டு பிரிவுகளில் நடுவர்களால்
மொத்தம் 15 கட்டுரைகள் பரிசீலிக்கப்பட்டன.

இவற்றில் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெறும் கட்டுரைகள்.

முதல் பரிசு : ரம்யா, அமெரிக்கா ( தளம்- பச்சை மண்ணு பக்கம், கட்டுரை- 'அன்றாட வாழ்வில் நகைச்சுவை')

இரண்டாம் பரிசு : ஆரூர் மூனா, தமிழ்நாடு (தளம்-தோத்தவண்டா, கட்டுரை - 'உறவுகள் -என் பார்வையில்' )


மூன்றாம் பரிசு (இருவருக்கு) :

1) டி.என். முரளிதரன், தமிழ்நாடு (தளம்-மூங்கில் காற்று,கட்டுரை-'அன்றாட வாழ்வில் நகைச்சுவை-நான் ரொம்ப நல்லவன் சார் .')
2) திருவாரூர் சரவணா, தமிழ்நாடு (தளம்-திருவாரூர் சரவணா, கட்டுரை-'அன்றாட வாழ்வில் நகைச்சுவை- தேங்காயில் பந்துவீச்சு...')


வெற்றி பெற்ற கட்டுரையாளர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!!

இந்தப் போட்டியில் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டு
தங்களுடைய மதிப்புமிக்க நேரத்தையும் அனுபவத்தையும் கட்டுரைகளில் பகிர்ந்த  அனைத்து கட்டுரையாளர்களுக்கும் தமிழ்ச்சரத்தின் மனப்பூர்வமான நன்றிகள் !. தொடர்ந்து எழுதுங்கள்.

பரிசீலிக்கப்பட்ட 15 கட்டுரைகள்;

பிரிவு-1 : (உறவுகள் - என் பார்வையில்)


பிரிவு-2 : (அன்றாட வாழ்வில் நகைச்சுவை)





இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் முதல் சுற்றில் தேர்வான 15 கட்டுரைகளையும் தமிழ்ச்சரம் இணையதளத்தில் "கட்டுரைப்போட்டி" எனும் தலைப்பில் அனைவரும் வாசிக்கலாம். (படம்)  அல்லது

நேரடியாக கட்டுரைப்போட்டி எனும் இணைப்பிலும் வாசிக்கலாம்.
 
இந்தப் போட்டி நடுவர்களாக இணைந்து செயல்பட்ட  எழுத்தாளர்கள் அரசன்,  அரவிந் சச்சிதாநந்தம் (சென்னை) மற்றும்  திருமதி மேகலா ராமமூர்த்தி (ஃபிளாரிடா, அமெரிக்கா) அவர்களுக்கும் தமிழ்ச்சரத்தின் அன்பும் சிறப்பு நன்றியும்.

மீண்டும் ஓர் இனிதான தருணத்தில் சந்திப்போம்.  நன்றி !

Tuesday, April 28, 2020

உங்கள் வலைத்தளத்தைத் தமிழ்ச்சரத்தில் இணைப்பது எப்படி ?

உங்கள் வலைத்தளத்தைத் தமிழ்ச்சரத்தில் இணைப்பதற்கான வழிமுறைகளை இந்தக் காணொளியில்  காணலாம்.





https://youtu.be/uS3A6XxNVAo

Sunday, April 26, 2020

சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி - இறுதிநாள், வியாழன் ஏப்ரல்,30

தமிழ்ச்சரம்.காம் அறிவித்திருந்த சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கு உங்கள் படைப்புகளை வெளியிட இறுதிநாள் வரும் 

வியாழன் ஏப்ரல்,30.  இந்தப் போட்டி குறித்த முந்தைய அறிவிப்பு இங்கே.

போட்டி நடுவர்கள்:
  •     எழுத்தாளர் அரசன், சென்னை
  •     எழுத்தாளர் அரவிந் சச்சிதாநந்தம், சென்னை
  •     திருமதி மேகலா ராமமூர்த்தி, ஃபிளாரிடா, அமெரிக்கா
 * வெற்றி பெற்ற படைப்புகள் பற்றிய அறிவிப்பு மே 11 அன்று வெளியிடப்படும்.

* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

 *இது தொடர்பாக நடுவர்களுடனோ போட்டியை நடத்துபவர்களுடனோ எந்த ஒரு கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி தொடர்புகளோ மேற்கொள்ளக்கூடாது.
 
குறிப்பு-  

இந்தப் போட்டிக்கு வந்து முதல் சுற்றில் தேர்வான கட்டுரைகளை தமிழ்ச்சரம் இணையதளத்தில் "கட்டுரைப்போட்டி" எனும் தலைப்பில் அனைவரும் வாசிக்கலாம். (படம் கீழே)


அல்லது நேரடியாக கட்டுரைப்போட்டி எனும் இணைப்பிலும் வாசிக்கலாம்.
 
கையடக்கக் கருவிகளில்... 







Sunday, April 19, 2020

ப்ளாகருக்கான தமிழ்ச்சரம் பதாகை (Tamilcharam banner for blogger)

தமிழ்ச்சரத்தை உங்கள் தள வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய
தமிழ்ச்சரத்தின் பதாகையை (tamilcharam.com banner-ஐ)  உங்கள் தளத்தில் இணைக்கலாம்.

உங்களுடைய  ப்ளாகர் (Blogger) தளத்தில் இணைப்பு தர கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாளுங்கள்.

குறிப்பு- இவ்வாறு ஒரு வலைப்பக்கம் வேறு எந்த பக்கத்துடனும் இணைக்கப்படுவது, "பின்னிணைப்பு" என்று அழைக்கப்படுகிறது. (When a webpage links to any other page, it's called a backlink).


STEP-1:  உங்களுடைய தளத்தின் இடதுபுற மெனுவில் Layout என்பதைத் தேர்வு செய்யுங்கள்.



 STEP-2: இப்போது தோன்றிய மெனுவில் Add a Gadget-ஐ தேர்வு செய்தால், கீழ்கண்ட மெனுவை நீங்கள் பார்க்கலாம்.




 STEP-3: அந்தப் புதிய மெனுவில் இப்போது HTML/JavaScript என்பதைச் சொடுக்கவும்.



STEP-4: அப்போது தோன்றும் மெனுவில் தலைப்பு (Title) என்பதில் Tamilcharam.com அல்லது தமிழ்ச்சரம் என நிரப்புங்கள். Content என்ற இடத்தில் கீழ்கண்ட HTML வரிகளை அப்படியே எந்தவித மாற்றமும் இல்லாமல் Copy & Paste செய்து Save பொத்தானை அழுத்தவும்.


<a href='https://www.tamilcharam.com' target='_blank'><img width="147" height="62" border="0" src='https://www.tamilcharam.com/images/tc_logo.JPG' title='Tamilcharam - Innovative Tamil Blog Aggregator' alt="Tamilcharam - Innovative Tamil Blog Aggregator"/></a>



STEP-5:  இறுதியாக Save arrangement செய்தபின் உங்களுடைய தளத்தில் தமிழ்சரத்தின் இலைச்சினை (logo) இணைக்கப்பட்டதை இப்போது நீங்கள்
(படத்தில் உள்ளது போல) பார்க்கலாம்.




இனி உங்கள் தளத்தில் இருந்து புதிதாக தோன்றியுள்ள தமிழ்ச்சரத்தின் Logoவை அழுத்துவதன் மூழமாக தமிழ்ச்சரம்.காம்-ஐ அடைய முடியும்.

Friday, April 17, 2020

இலவச வலைப்பூ ஒன்றை உங்களுக்கு உருவாக்குவது எப்படி?

நீங்கள் இணையத்தில் உங்களுக்கென பிரத்தியோகமான ஒரு தளத்தை எந்தவித செலவும் இன்றி ஏற்படுத்திக் கொள்ள இயலும். அதற்கு வலைப்பூக்கள் உதவிசெய்கிறன. வலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் 'பிளாக்' (blog) என்கிறோம்.  வலைப்பூக்களின் உதவியால் நீங்கள் இணையத்தில் உள்ள அனைவரிடமும் எளிதாக கருத்துப்பரிமாற்றம் செய்ய இயலும். 

அதாவது உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை உடனடியாகத் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான விமர்சனங்களைப் பெறுவதற்கும் உதவும் சிறந்த ஊடகமாக வலைப்பூக்கள் விளங்குகின்றன.

இந்த வலைப்பூக்களை ஏற்படுத்தும் வசதியை BloggerWordpress என்ற இரண்டு தளங்கள் செய்து தருகின்றன. இவற்றில் blogger.com தளம் வழியாக உங்களுக்கென எப்படி ஓர் இலவச வலைப்பதிவை உருவாக்குவது எப்படி என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

Blogger தளத்தில் உள்ளே நுழைய Gmail account தேவை. உங்களுக்கு Gmail Account- இல்லை என்றால் முதலில் அதைத் துவங்கிவிட்டு இங்கு வரவும்.

Step 1- பிறகு www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.


Step 2- வரும் பக்கத்தில் வலது பக்கம் உள்ள  Sign in என்பதை க்ளிக் செய்யுங்கள்.

Step 3-வரும் பக்கத்தில் Gmail மின்னஞ்சல் , கடவுச்சொல்  கொடுத்து Sign in என்பதை க்ளிக் செய்யுங்கள்.

Step 4-உள் நுழைந்த பின் new blog என்பதை அழுத்தினால் கீழே உள்ளவாறு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

  1. மேலே உள்ள படத்தில் Title (தலைப்பு) என்ற இடத்தில் உங்கள் வலைப்பூவின் பெயரைக் கொடுக்கவும்.  
  2. அடுத்து மேலே உள்ள படத்தில் Address (முகவரி) என்ற இடத்தில் வலைப்பூவிற்கான தள முகவரியைக்  கொடுக்கவும் (எடுத்துக்காட்டு- tamilcharamblog.blogspot.com).  நீங்கள் இங்கே தரும் பெயர் ஏற்கனவே Blogger-ல் இருந்தால் Sorry, this blog address is not available என காட்டும்.  அப்போது நீங்கள் வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்த பெயர் உறுதிசெய்யப்பட்டால் This blog address is available என காட்டும்.
  3. இப்போது, மேலே உள்ள படத்தில் Theme என்ற பகுதியில் Simple அல்லது நீங்கள் விருப்பப்பட்ட வேறு ஏதேனும் ஒரு தீம் தேர்வு செய்து Create blog என்பதை க்ளிக் செய்யதால் உங்களுக்கான வலைப்பூ தயார்.
  4. இனி நீங்கள் மேலே உருவான புதிய வலைத்தளத்தில் உங்கள் விருப்பம் போல பதிவிடலாம்.

குறிப்பு- வலைப்பதிவு பற்றி மேலும் பல தகவல்களை அறிய நீங்கள் விக்கிபீடியாவின் இந்த முகவரியைச் சொடுக்கவும்.

Sunday, March 29, 2020

தமிழ்ச்சரம்.காம் - சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி

குறிப்பு : **சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கான இறுதிநாள் ஏப்ரல், 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது **

தமிழ் வலைதள எழுத்துகளை ஒருங்கிணைத்து எழுதுபவர்களையும், வாசிப்பவர்களையும் ஊக்குவிப்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) இந்தக் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது.

இந்தச் சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கு இரண்டு பிரிவுகளில் உங்கள் கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன.

பிரிவு-1 : (உறவுகள் - என் பார்வையில்)

தாய், தந்தை என்ற உறவில் தொடங்கி பின் மகன், மகள், தம்பி, தங்கைகாதலன், காதலி, அத்தை, மாமன்.... என நீளும் பல உறவுகளின் சங்கமமே மனித வாழ்வுஆனால், இன்றைய சமூக சூழலில் உறவுகளுக்கிடேயே எதிர்பார்ப்புகள் மாறி நாளுக்கு நாள்  உறவு  சிக்கலாகிக் கொண்டே இருக்கின்றது

இந்த உறவுகளில்நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றிரண்டு உறவு குறித்தும், உங்கள் பார்வையில் அந்த உறவுகளைப் பேணி, மேம்பட செய்ய வேண்டியது குறித்தும் "உறவுகள் - என் பார்வையில்" என்ற தலைப்பில் எழுதுங்களேன்.

பிரிவு-2 : (அன்றாட வாழ்வில் நகைச்சுவை)

'நகைச்சுவை' தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம் என யாராவது சொன்னால் அதை நாம் கொஞ்சம் மாற்றுக் கண்ணோட்டத்தோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.  

ஏனேன்றால், இங்கு பட்டி மன்றங்கள், திரைப்படங்கள், மேடை நாடகங்கள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களைத் தாண்டி அன்றாட வாழ்வில் ஒரு வேடிக்கையான தருணம், முரண்பாடு, சிறு குழப்பம் போன்றவை கண்ணுக்குப்பட்டால் அதில் உள்ள நகைச்சுவை பெரும்பாலும் ரசிக்கப்படுவதில்லை என்பதே உண்மை

இது பற்றிய உங்கள் பார்வையை "அன்றாட வாழ்வில் நகைச்சுவை" எனும் தலைப்பில் (கொஞ்சம் நகைச்சுவையாகவே) எழுதுங்களேன்.

பரிசு விபரங்கள்

முதல் பரிசு ரூ. 3,500
இரண்டாம் பரிசு ரூ. 2,500
மூன்றாம் பரிசு ரூ. 1,000


விதிமுறைகள்
  • இந்தக் கட்டுரைகளைப் போட்டியாளர்கள் தங்களுடைய blogspot, wordpress  போன்ற வலைப்பூ (blog) அல்லது இணையதளங்களில் எழுதி வெளியிடவேண்டும்.
  • அந்தப் பதிவில் டேக்காக  #tccontest2020 என்ற குறிச்சொல்(tag) சேர்த்திருக்க வேண்டும்.
  • அந்தத் தளங்கள் தமிழ்ச்சரத்துடன் முறையாக இணைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
  • முறையாக தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பட்ட தளங்களில் இருந்து உங்கள் படைப்புகளை எழுதி வெளியிடவேண்டிய நாள்  01-ஏப்ரல்-2020 முதல் 14-ஏப்ரல்-2020 வரை (இந்திய நேரம்)
  • அனைவருக்கும் வாய்ப்பு தரும் வகையில் ஒருவர் மேலே சொன்ன ஒரு பிரிவில் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவார்.
  • வெற்றி பெற்ற படைப்புகள் பற்றிய அறிவிப்பு மே முதல் வாரம் அறிவிக்கப்படும்.
  • மேலே சொன்ன உள்ளடக்கத்துடன் இல்லாத படைப்புகள் நிராகரிக்கப்படும்
  • படைப்புகள் குறைந்தது 1000 சொற்களாவது இருக்கவேண்டும்.
  • இந்தப் படைப்புகள் இதற்கு முன் மற்ற இதழ்கள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் பிரசுரிக்கப்படவில்லை என்பதைப் படைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.