சித்திரைத் திருநாள் 2020 கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்கள் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.
முதல் பரிசு பெற்ற ரம்யாவின் முழுப்பெயர் ரம்யா ரவீந்திரன். சொந்த ஊர் கடலூர். கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவரும் ரம்யா ஐ.டி.
துறையில் பணிபுரிகிறார்.
பச்சை மண்ணு பக்கம் எனும் தனது
வலைத்தளம் வழியாக சிறுகதை
,கவிதை,கட்டுரை எனத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
தனது எழுத்துடன் அமெரிக்காவில் இயங்கும் தமிழ்ப்பள்ளியில் பகுதி நேர தமிழாசிரியர், பரதக் கலைஞர் என பல தளங்களில் இயங்கும் இவர் தமிழ் மீதும் தமிழர் கலைகள் மீதும் தீராத ஆர்வம் கொண்டவர். வாழ்த்துகள் ரம்யா !! தொடர்ந்து எழுதுங்கள்.
இரண்டாம் பரிசு பெற்ற ஆரூர்மூனா-வின் இயற்பெயர் செந்தில்குமார்.
தோத்தவண்டா வலைத்தளம், முகநூல் வழியாக திரைவிமர்சனம், அனுபவக் கட்டுரைகள், உணவுக் கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவரான மூனா தற்போது ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடருக்கு வசனமும் எழுதி வருகிறார். வாழ்த்துகள் மூனா !
மூன்றாம் பரிசு பெற்ற முரளியின் சொந்த ஊர் மதுராந்தகம். தற்போது சென்னையில் மாநில அரசுப்பணியில் இருக்கும் முரளி மூங்கில்காற்று எனும் வலைப்பூவில் 2011 இல் இருந்து எழுதி வருகிறார்.
கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் முரளி எழுத்து சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார். வாழ்த்துகள் முரளி !!
மூன்றாம் பரிசு பெறும் மற்றோரு வலைப்பதிவர் திருவாரூர் சரவணா. தொழில் முனைவரான சரவணா தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வலைத்தளங்களில் எழுதிவருகிறார்.

போட்டிகளில் பரிசுகளையும் வென்றிருக்கிறார். தமிழ்ச்சரத்தின் மலர்ச்சியால் தனது தளத்திற்கான வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறும் சரவணனுக்கு திரைத்துறையிலும் கொஞ்சம் அனுபவம் உண்டு. வாழ்த்துகள் சரவணன் !!
ஆஹா...அருமையான அறிமுகம். வெற்றி பெற்ற அனைவர்க்கும் வாழ்த்துக்கள். இவர்களின் படைப்புகளும் அருமை.
ReplyDeleteஇதில் நண்பர் நல்லவர் முரளிதரன் அவர்களை நான் முன்பே சந்தித்து இருக்கின்றேன். நல்ல மனிதர்.
நன்றி! விசு சார். கடந்த மாதம் தொலைபேசியில் நீங்கள் என்னுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
Deleteஅனைவர்க்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே !!
Deleteநண்பர் விசுவின் புத்தக வெளியிட்டு விழாவில் நண்பர் முரளியை நானும் சந்தித்து இருக்கிறேன் ஒரு நல்ல மனிதரை சந்தித்ததில் இன்று வரை பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அவர் வாழ வாழ்த்துக்கள்
ReplyDelete//நண்பர் விசுவின் புத்தக வெளியிட்டு விழாவில் நண்பர் முரளியை நானும் சந்தித்து இருக்கிறேன்/
Deleteமதுர.. இன்னாது.?. என் புத்தக வெளியீட்டு விழாவுக்கு நீ வந்தியா? உன் பினாமியா தானே அனுப்பி வைச்சதா கேள்விபட்டேன்.
ஓ! அப்ப வந்தது மதுரைத் தமிழன்தானா?
Deleteவிசு சார்,மதுரைத் தமிழன் இருவருக்கும் நகைச்சுவை கைவந்த கலை. இருவரின் பதிவுகளுக்கு ரசிகன் நான்.என் நகைச்சுவை உணர்வும் வெளிப்படுத்த முடிந்தது என்றால் உங்களை போன்றவர்களின் பதிவுகளைப் படித்துத்தான்.
Deleteவெற்றி பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ரூபன்!!
Deleteவெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துகளுக்கும், வருகைக்கும் நன்றி திரு.நடனசபாபதி அவர்களே.
Deleteசிறப்பாக ஒரு போட்டியினை நடத்தி, உரிய வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பற்றிய அறிமுகத்தைத் தந்துள்ள விதம் போற்றுதற்குரியது. மற்றவர்கள் மென்மேலும் எழுதும் ஆவலைத் தூண்டும் அளவிற்கு பல அரிய பணிகளை மேற்கொண்டு வருகின்ற உங்களுக்கு மனமார்ந்த நன்றி. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவலைப்பதிவர்களின் அன்பு, ஆதரவுடன் தொடர்வோம். வாழ்த்துகளுக்கு நன்றி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஏதோ போட்டி வைத்தோம் முடித்தோம் என்று இல்லாமல் சிறப்பான அறிமுகமும் செய்துள்ள தமிழ்ச்சரத்துக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே !!
Delete