Saturday, May 16, 2020

சித்திரைத் திருநாள் கட்டுரைப்போட்டியில் வென்றவர்கள் - சிறிய அறிமுகம்


சித்திரைத் திருநாள் 2020 கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்கள் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.



முதல் பரிசு பெற்ற ரம்யாவின் முழுப்பெயர் ரம்யா ரவீந்திரன். சொந்த ஊர் கடலூர். கடந்த 20  ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவரும் ரம்யா ஐ.டி.
துறையில் பணிபுரிகிறார்.

பச்சை மண்ணு பக்கம் எனும் தனது
வலைத்தளம் வழியாக  சிறுகதை
,கவிதை,கட்டுரை எனத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

தனது எழுத்துடன்  அமெரிக்காவில் இயங்கும் தமிழ்ப்பள்ளியில் பகுதி நேர தமிழாசிரியர், பரதக் கலைஞர் என பல தளங்களில் இயங்கும் இவர் தமிழ் மீதும் தமிழர் கலைகள் மீதும் தீராத ஆர்வம் கொண்டவர். வாழ்த்துகள் ரம்யா !! தொடர்ந்து எழுதுங்கள்.


இரண்டாம் பரிசு பெற்ற  ஆரூர்மூனா-வின் இயற்பெயர் செந்தில்குமார்.
சொந்த ஊர் திருவாரூர். தற்போது சென்னையில் மத்திய அரசுப்பணியில் இருக்கும் மூனா தனது
தோத்தவண்டா வலைத்தளம்,  முகநூல் வழியாக  திரைவிமர்சனம், அனுபவக் கட்டுரைகள், உணவுக் கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவரான மூனா தற்போது ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடருக்கு வசனமும் எழுதி வருகிறார். வாழ்த்துகள் மூனா !




மூன்றாம் பரிசு பெற்ற முரளியின் சொந்த ஊர் மதுராந்தகம். தற்போது சென்னையில் மாநில அரசுப்பணியில் இருக்கும் முரளி மூங்கில்காற்று எனும் வலைப்பூவில் 2011 இல் இருந்து எழுதி வருகிறார்.

கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் முரளி எழுத்து சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார். வாழ்த்துகள் முரளி !!



மூன்றாம் பரிசு பெறும் மற்றோரு வலைப்பதிவர் திருவாரூர் சரவணா.  தொழில் முனைவரான சரவணா தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வலைத்தளங்களில் எழுதிவருகிறார்.

வெகுஜன இதழ்களில் சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் எழுதிவரும் சரவணா பல
போட்டிகளில் பரிசுகளையும் வென்றிருக்கிறார்.  தமிழ்ச்சரத்தின் மலர்ச்சியால் தனது தளத்திற்கான  வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறும் சரவணனுக்கு திரைத்துறையிலும் கொஞ்சம் அனுபவம் உண்டு.  வாழ்த்துகள் சரவணன் !!





Sunday, May 10, 2020

சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி - முடிவுகள்


தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) நடத்திய சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி (2020) முடிவுகள் பற்றிய அறிவிப்பு.

இந்தப் போட்டிக்கு "உறவுகள் - என் பார்வையில்"
, "அன்றாட வாழ்வில் நகைச்சுவை" எனும் இரண்டு பிரிவுகளில் கட்டுரைகள் வரவேற்க்கப்பட்டிருந்தன.

இந்த இரண்டு பிரிவுகளில் நடுவர்களால்
மொத்தம் 15 கட்டுரைகள் பரிசீலிக்கப்பட்டன.

இவற்றில் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெறும் கட்டுரைகள்.

முதல் பரிசு : ரம்யா, அமெரிக்கா ( தளம்- பச்சை மண்ணு பக்கம், கட்டுரை- 'அன்றாட வாழ்வில் நகைச்சுவை')

இரண்டாம் பரிசு : ஆரூர் மூனா, தமிழ்நாடு (தளம்-தோத்தவண்டா, கட்டுரை - 'உறவுகள் -என் பார்வையில்' )


மூன்றாம் பரிசு (இருவருக்கு) :

1) டி.என். முரளிதரன், தமிழ்நாடு (தளம்-மூங்கில் காற்று,கட்டுரை-'அன்றாட வாழ்வில் நகைச்சுவை-நான் ரொம்ப நல்லவன் சார் .')
2) திருவாரூர் சரவணா, தமிழ்நாடு (தளம்-திருவாரூர் சரவணா, கட்டுரை-'அன்றாட வாழ்வில் நகைச்சுவை- தேங்காயில் பந்துவீச்சு...')


வெற்றி பெற்ற கட்டுரையாளர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!!

இந்தப் போட்டியில் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டு
தங்களுடைய மதிப்புமிக்க நேரத்தையும் அனுபவத்தையும் கட்டுரைகளில் பகிர்ந்த  அனைத்து கட்டுரையாளர்களுக்கும் தமிழ்ச்சரத்தின் மனப்பூர்வமான நன்றிகள் !. தொடர்ந்து எழுதுங்கள்.

பரிசீலிக்கப்பட்ட 15 கட்டுரைகள்;

பிரிவு-1 : (உறவுகள் - என் பார்வையில்)


பிரிவு-2 : (அன்றாட வாழ்வில் நகைச்சுவை)





இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் முதல் சுற்றில் தேர்வான 15 கட்டுரைகளையும் தமிழ்ச்சரம் இணையதளத்தில் "கட்டுரைப்போட்டி" எனும் தலைப்பில் அனைவரும் வாசிக்கலாம். (படம்)  அல்லது

நேரடியாக கட்டுரைப்போட்டி எனும் இணைப்பிலும் வாசிக்கலாம்.
 
இந்தப் போட்டி நடுவர்களாக இணைந்து செயல்பட்ட  எழுத்தாளர்கள் அரசன்,  அரவிந் சச்சிதாநந்தம் (சென்னை) மற்றும்  திருமதி மேகலா ராமமூர்த்தி (ஃபிளாரிடா, அமெரிக்கா) அவர்களுக்கும் தமிழ்ச்சரத்தின் அன்பும் சிறப்பு நன்றியும்.

மீண்டும் ஓர் இனிதான தருணத்தில் சந்திப்போம்.  நன்றி !