
தமிழ்ச்சரம்.காம் (www.tamilcharam.com) நடத்திய சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டி (2020) முடிவுகள் பற்றிய அறிவிப்பு.
இந்தப் போட்டிக்கு "உறவுகள் - என் பார்வையில்"
, "அன்றாட வாழ்வில் நகைச்சுவை" எனும் இரண்டு பிரிவுகளில் கட்டுரைகள் வரவேற்க்கப்பட்டிருந்தன.
இந்த இரண்டு பிரிவுகளில் நடுவர்களால்
மொத்தம் 15 கட்டுரைகள் பரிசீலிக்கப்பட்டன.
இவற்றில் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெறும் கட்டுரைகள்.
முதல் பரிசு : ரம்யா, அமெரிக்கா ( தளம்- பச்சை மண்ணு பக்கம், கட்டுரை- 'அன்றாட வாழ்வில் நகைச்சுவை')
இரண்டாம் பரிசு : ஆரூர் மூனா, தமிழ்நாடு (தளம்-தோத்தவண்டா, கட்டுரை - 'உறவுகள் -என் பார்வையில்' )
மூன்றாம் பரிசு (இருவருக்கு) :
1) டி.என். முரளிதரன், தமிழ்நாடு (தளம்-மூங்கில் காற்று,கட்டுரை-'அன்றாட வாழ்வில் நகைச்சுவை-நான் ரொம்ப நல்லவன் சார் .')
2) திருவாரூர் சரவணா, தமிழ்நாடு (தளம்-திருவாரூர் சரவணா, கட்டுரை-'அன்றாட வாழ்வில் நகைச்சுவை- தேங்காயில் பந்துவீச்சு...')
வெற்றி பெற்ற கட்டுரையாளர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!!
இந்தப் போட்டியில் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டு
தங்களுடைய மதிப்புமிக்க நேரத்தையும் அனுபவத்தையும் கட்டுரைகளில் பகிர்ந்த அனைத்து கட்டுரையாளர்களுக்கும் தமிழ்ச்சரத்தின் மனப்பூர்வமான நன்றிகள் !. தொடர்ந்து எழுதுங்கள்.
பரிசீலிக்கப்பட்ட 15 கட்டுரைகள்;
பிரிவு-1 : (உறவுகள் - என் பார்வையில்)
பிரிவு-2 : (அன்றாட வாழ்வில் நகைச்சுவை)
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் முதல் சுற்றில் தேர்வான 15 கட்டுரைகளையும் தமிழ்ச்சரம் இணையதளத்தில் "கட்டுரைப்போட்டி" எனும் தலைப்பில் அனைவரும் வாசிக்கலாம். (படம்) அல்லது
நேரடியாக கட்டுரைப்போட்டி எனும் இணைப்பிலும் வாசிக்கலாம்.
இந்தப் போட்டி நடுவர்களாக இணைந்து செயல்பட்ட எழுத்தாளர்கள் அரசன், அரவிந் சச்சிதாநந்தம் (சென்னை) மற்றும் திருமதி மேகலா ராமமூர்த்தி (ஃபிளாரிடா, அமெரிக்கா) அவர்களுக்கும் தமிழ்ச்சரத்தின் அன்பும் சிறப்பு நன்றியும்.
மீண்டும் ஓர் இனிதான தருணத்தில் சந்திப்போம். நன்றி !
போட்டியில் வென்றவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteசிறப்பாக இப்போட்டியை நடத்தி முடித்த தமிழ்ச்சரம் பொறுப்பாளர்களுக்கு என் பாராட்டுகள்.
தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !!.
Deleteபோட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்ச்சரம் அமைப்பிற்கும், கட்டுரைகளை பரிசீலித்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர் குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.கட்டுரை போட்டியில் வென்ற ஏனைய போட்டியாளர்களுக்கும், பங்கேற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.
ReplyDeleteமுதல் பரிசு வென்ற தங்களுக்கு வாழ்த்துகள். மிக்க நன்றி !!.
Deleteவலைப்பூக்கள் தொய்வுற்ற நிலையில் சிறப்பான போட்டியை நடத்டி ஊக்குவித்த தமிழ்ச்சரம் குழுவினருக்கு நன்றி. எனக்கும் மூன்றாம் பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி. முதல் இரண்டாம் பரிசுபெற்றவர்களுக்கும் என்னுடன் இணைந்து மூன்றாம் பரிசை பகிர்ந்துகொண்ட சரவணா அவர்களுக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் பாராட்டுகள்.
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !! வலைப் பதிவுகளில் தொடர்பவர்களையும், புதிதாக வருபவர்களையும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறோம்.
Deleteதமிழ் சரத்தின் அருமையான ஊக்கமான போட்டி, தொடர்ந்து செய்யுங்கள். பங்கேற்றவர்க்களுக்கும் வெற்றி வாகை சூடியோருக்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !!.
Deleteசிறப்பு மிகச் சிறப்பு, வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !!. இரண்டாம் பரிசுக்கு பாராட்டுகளும் கூட..
Deleteபோட்டியை நடத்தியவர்களுக்கும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், நடுவர்களுக்கும் இறுதியாக போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
ReplyDeleteதொடர்ந்து தமிழ்ச்சரத்தை ஊக்கப்படுத்தும் தங்களுக்கு நன்றி, தொடர்ந்து பயணிப்போம்.
Deleteவெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி !!.
Deleteவெற்றியாளர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் பாராட்டக்கள்.மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteமிக்க நன்றி !!.
Deleteஏதோ பேருக்காகவும், தளத்தினை பிரபலப்படுத்தவும் போட்டியை நடத்தினோம் என்று இல்லாமல், உறவுகள், நகைச்சுவை குறித்து தலைப்பு கொடுத்தது மிகவும் அருமை.
ReplyDeleteநம்மில் பெரும்பாலானவர்கள் பணி, வாழ்க்கைச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் மறந்து விட்ட உறவுகள் பற்றிய நினைவுகளை மீண்டும் மனதுக்குள் கொண்டு வரவும், நம்மைச் சுற்றி எதிர்பாராமல் நிகழும் சிறு சிறு நகைச்சுவைகளையும் ரசிக்க கற்றுக் கொடுத்து விட்டது இந்த போட்டி.
இதில் நான் சுவாரஸ்யமான நகைச்சுவை சம்பவங்களை தொகுத்து எழுதிய கட்டுரைக்கு மூன்றாம் பரிசு கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.
உண்மை. நம்மைச் சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பதே எழுதுவதற்கான முதல் கச்சா என்பார்கள்.
Deleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பாராட்டுகள் !!.
வெறும் திரட்டி தொடங்கியதோடு நில்லாமல் இப்படிக் கட்டுரைப் போட்டியெல்லாம் வைத்துப் பதிவர்களை எழுதத் தூண்டும் ‘தமிழ்ச்சரம்’ தளத்தினருக்கு நன்றி! போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலைதளங்களில் எழுதுவது ஒரு தனி அனுபவம். அதில் தொடர்பவர்களை ஊக்கப்படுத்தவே இந்த ஒரு சிறிய முயற்சி.
Deleteஉங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ! வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்குக.