தமிழ் வலைதள எழுத்துகளை ஒருங்கிணைத்து எழுதுபவர்களையும்,
வாசிப்பவர்களையும் ஊக்குவிப்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் தமிழ்ச்சரம்.காம்
(www.tamilcharam.com) இந்தக் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது.
இந்தச் சித்திரைத் திருநாள் கட்டுரைப் போட்டிக்கு இரண்டு பிரிவுகளில் உங்கள் கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன.
பிரிவு-1 : (உறவுகள் - என் பார்வையில்)
தாய், தந்தை என்ற உறவில் தொடங்கி பின் மகன், மகள், தம்பி, தங்கை, காதலன், காதலி, அத்தை, மாமன்.... என நீளும் பல உறவுகளின் சங்கமமே மனித வாழ்வு. ஆனால், இன்றைய சமூக சூழலில் உறவுகளுக்கிடேயே எதிர்பார்ப்புகள்
மாறி நாளுக்கு நாள் உறவு சிக்கலாகிக் கொண்டே இருக்கின்றது.
இந்த உறவுகளில், நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றிரண்டு உறவு குறித்தும், உங்கள் பார்வையில் அந்த உறவுகளைப் பேணி, மேம்பட செய்ய வேண்டியது குறித்தும் "உறவுகள் - என்
பார்வையில்" என்ற தலைப்பில் எழுதுங்களேன்.
பிரிவு-2 : (அன்றாட வாழ்வில் நகைச்சுவை)
'நகைச்சுவை' தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம் என யாராவது சொன்னால் அதை நாம் கொஞ்சம் மாற்றுக் கண்ணோட்டத்தோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது.
ஏனேன்றால், இங்கு பட்டி மன்றங்கள், திரைப்படங்கள்,
மேடை நாடகங்கள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களைத் தாண்டி அன்றாட வாழ்வில் ஒரு வேடிக்கையான தருணம், முரண்பாடு, சிறு குழப்பம் போன்றவை கண்ணுக்குப்பட்டால் அதில் உள்ள நகைச்சுவை பெரும்பாலும் ரசிக்கப்படுவதில்லை என்பதே உண்மை.
இது பற்றிய உங்கள் பார்வையை "அன்றாட வாழ்வில் நகைச்சுவை"
எனும் தலைப்பில் (கொஞ்சம் நகைச்சுவையாகவே) எழுதுங்களேன்.
பரிசு விபரங்கள்
முதல் பரிசு ரூ. 3,500
இரண்டாம் பரிசு ரூ. 2,500
மூன்றாம் பரிசு ரூ. 1,000
விதிமுறைகள்
- இந்தக் கட்டுரைகளைப் போட்டியாளர்கள் தங்களுடைய blogspot, wordpress போன்ற வலைப்பூ (blog) அல்லது இணையதளங்களில் எழுதி வெளியிடவேண்டும்.
- அந்தப் பதிவில் டேக்காக #tccontest2020 என்ற குறிச்சொல்(tag) சேர்த்திருக்க வேண்டும்.
- அந்தத் தளங்கள் தமிழ்ச்சரத்துடன் முறையாக இணைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
- முறையாக தமிழ்ச்சரத்தில்
இணைக்கப்பட்ட தளங்களில் இருந்து உங்கள் படைப்புகளை எழுதி வெளியிடவேண்டிய நாள் 01-ஏப்ரல்-2020 முதல்
14-ஏப்ரல்-2020வரை (இந்திய நேரம்). - அனைவருக்கும் வாய்ப்பு தரும் வகையில் ஒருவர் மேலே சொன்ன ஒரு பிரிவில் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவார்.
- வெற்றி பெற்ற படைப்புகள் பற்றிய அறிவிப்பு மே முதல் வாரம் அறிவிக்கப்படும்.
- மேலே சொன்ன உள்ளடக்கத்துடன் இல்லாத படைப்புகள் நிராகரிக்கப்படும்
- படைப்புகள் குறைந்தது 1000 சொற்களாவது இருக்கவேண்டும்.
- இந்தப் படைப்புகள் இதற்கு முன் மற்ற இதழ்கள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் பிரசுரிக்கப்படவில்லை என்பதைப் படைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
ReplyDeleteசிறப்புப் பதிவு
வாழ்த்துகள்
உற்சாகம் தரும் வாழ்த்து. நன்றி
Deleteவரவேற்கிறேன்.
ReplyDeleteபெருமளவில் பங்கேற்று, தமிழ்ச்சர நிர்வாகிகளை ஊக்குவிப்பது வலைப்பதிவர்களின் கடமை.
வாழ்த்துகளுக்கு. நன்றி!
Deleteநல்லதொரு முயற்சியும் ஊக்குவிப்பும்... தொடர வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துகளுக்கு. வலைப்பதிவர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்ளுங்கள். நன்றி!
DeleteSuper ,வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி மதுரை சரவணன் !!
Deleteநல்ல ஒருங்கிணைப்பு முயற்சி. வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பர்கள் கலந்து கொள்ளுங்கள். வாழ்த்துகளுக்கு நன்றி !
Deleteநல்லதொரு முயற்சி. தமிழ்மணம் நடத்திய போட்டிகள் பல வலைப்பதிவர்களை உருவாக்கியது. அதுபோல தமிழ்ச்சரத்தின் இம்முயற்சி பல பதிவர்களை உருவாக்கட்டும்.
ReplyDeleteவாழ்த்துகள்
அன்பு வாழ்த்துகளுக்கு நன்றி !!
Deleteமிகச்சிறப்பான போட்டி. வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே !!
Deleteஇந்த முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும். வலைத்தளங்கள் மீண்டும் பளிச்சிட நல்வாய்ப்பாக அமையும்.
ReplyDeleteதோழியின் வாழ்த்துகளுக்கு நன்றி !!
Deleteஎன் வலைப்பூவை எப்படி தமிழ்ச்சரம் தளத்துடன் இணைக்க வேண்டும் ?
ReplyDeletewww.tamilcharam.com தளத்தில் இடதுபுறம் இருக்கும் மெனுவில்
Deleteஉள்ள 'இணைக்க' பொத்தானை அழுத்தவும்.
உங்களது முயற்சிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
ReplyDeleteநன்றி நண்பரே !!
Deleteஎன் வலைப்பூவை எப்படி தமிழ்ச்சரம் தளத்துடன் இணைக்க வேண்டும் ?
ReplyDeletewww.tamilcharam.com தளத்தில் இடதுபுறம் இருக்கும் மெனுவில்
Deleteஉள்ள 'இணைக்க' பொத்தானை அழுத்தவும்.
போட்டி நிகழ்வு சிறக்க வாழ்த்துகள்......
ReplyDeleteநன்றி நண்பரே !!
Deleteநல்ல முயற்சி. வரவேற்கப்படவேண்டிய ஒன்று. வாழ்த்துகளும் பாராட்டுகளும்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே !!
Deleteவரவேற்கிறோம்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி !!
Deleteதமிழ் மணக்கட்டும்
ReplyDeleteநன்றி !! பதிவர்கள் ஒற்றுமை ஓங்குக..
Deleteவளர்க தமிழ்.
ReplyDeleteநன்றி !!
Delete1000 சொற்கள் அதிகமாகத் தெரிகிறதே. நீண்ட கட்டுரைகளை வாசகர்கள் விரும்புவார்களா?
ReplyDeleteகொஞ்சம் ஆழமான கட்டுரைகளை வரவேற்க்கவே இந்த ஏற்பாடு.பதிவுலம் தரும் எழுத்து சுதந்திரத்தை எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் பயன்படுத்திக்கொள்வார்கள் என நம்புகிறோம்.
Deleteஅருமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி !!
Deleteநல்லதொரு முயற்சி. பங்கு கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteபதிவில் #tccontest2020 என்கிற tag எவ்வாறு எந்த இடத்தில் இணைக்கவேண்டும்
ReplyDeleteபிளாக்கில் எழுதுபவராக இருந்தால் லேபில்ச் என்று ஆப்ஸ்ஹன் இருக்கும். அதில் கட்டுரை பற்றிய குறியீட்டு சொறகளை குறிப்பிடலாம். குறைப்பாக நகைச்சுவை,அரசியல் , சினிமா, நிகழ்வுகள், தொழில்நுட்பம் என்று குறி சொற்கள் எழுதுவது வழக்கம் அதில் #tccontest2020 என்பதையும் சேர்க்க வேண்டும். அவ்வளவே. இதற்குமுன்பாக உங்கள் வலைத்தளம் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பட்டுள்ளதா எனபதைஉறுதி செய்து கொள்ள வேண்டும்
Deleteஎன் கட்டுரையை எப்படி டேக்(tag) செய்து உங்களுக்கு பகிர வேண்டும்? கொஞ்சம் விலக்கி சொல்லுங்கள்। இல்லையென்றால் என் கட்டுரையை நான் உங்கள் மெயில்க்கு (mail) அனுப்பலாமா ? Please reply.
ReplyDeleteபிளாக்கில் எழுதுபவராக இருந்தால் லேபில்ச் என்று ஆப்ஸ்ஹன் இருக்கும். அதில் கட்டுரை பற்றிய குறியீட்டு சொறகளை குறிப்பிடலாம். குறைப்பாக நகைச்சுவை,அரசியல் , சினிமா, நிகழ்வுகள், தொழில்நுட்பம் என்று குறி சொற்கள் எழுதுவது வழக்கம் அதில் #tccontest2020 என்பதையும் சேர்க்க வேண்டும். அவ்வளவே. இதற்குமுன்பாக உங்கள் வலைத்தளம் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பட்டுள்ளதா எனபதைஉறுதி செய்து கொள்ள வேண்டும்
Deleteவலைத்தளம் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பத்துவிட்டதை எவ்வாறு உறுதி செய்து கொள்வது? நன்றி
ReplyDeleteஎன மாமாவின் வலைத்தளத்தை இணைக்கச் சொல்லி படிவத்தைப் பூர்த்தி செய்து நான்கு நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரையிலும் உறுதிப்படுத்தப் பட்டுவிட்டது என எந்த மின்னஞ்சலும் வரவில்லை.
Deleteஅல்லது உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் கட்டுரையை அனுப்பலாமா? நன்றி.
Deleteஇணைக்கப்பட்டுவிட்டது. மிக்க நன்றி!
Deleteஎன் வலைத்தளம் இணைக்கப்பட்டுள்ளதா
Deleteவாழ்த்துக்கள்
ReplyDelete