சித்திரைத் திருநாள் 2020 கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற வலைப்பதிவர்கள் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.
முதல் பரிசு பெற்ற ரம்யாவின் முழுப்பெயர் ரம்யா ரவீந்திரன். சொந்த ஊர் கடலூர். கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவரும் ரம்யா ஐ.டி.
துறையில் பணிபுரிகிறார்.
பச்சை மண்ணு பக்கம் எனும் தனது
வலைத்தளம் வழியாக சிறுகதை
,கவிதை,கட்டுரை எனத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
தனது எழுத்துடன் அமெரிக்காவில் இயங்கும் தமிழ்ப்பள்ளியில் பகுதி நேர தமிழாசிரியர், பரதக் கலைஞர் என பல தளங்களில் இயங்கும் இவர் தமிழ் மீதும் தமிழர் கலைகள் மீதும் தீராத ஆர்வம் கொண்டவர். வாழ்த்துகள் ரம்யா !! தொடர்ந்து எழுதுங்கள்.
இரண்டாம் பரிசு பெற்ற ஆரூர்மூனா-வின் இயற்பெயர் செந்தில்குமார்.
சொந்த ஊர் திருவாரூர். தற்போது சென்னையில் மத்திய அரசுப்பணியில் இருக்கும் மூனா தனது
தோத்தவண்டா வலைத்தளம், முகநூல் வழியாக திரைவிமர்சனம், அனுபவக் கட்டுரைகள், உணவுக் கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவரான மூனா தற்போது ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடருக்கு வசனமும் எழுதி வருகிறார். வாழ்த்துகள் மூனா !
மூன்றாம் பரிசு பெற்ற முரளியின் சொந்த ஊர் மதுராந்தகம். தற்போது சென்னையில் மாநில அரசுப்பணியில் இருக்கும் முரளி மூங்கில்காற்று எனும் வலைப்பூவில் 2011 இல் இருந்து எழுதி வருகிறார்.
கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் முரளி எழுத்து சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார். வாழ்த்துகள் முரளி !!
மூன்றாம் பரிசு பெறும் மற்றோரு வலைப்பதிவர் திருவாரூர் சரவணா. தொழில் முனைவரான சரவணா தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வலைத்தளங்களில் எழுதிவருகிறார்.
வெகுஜன இதழ்களில் சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள் எழுதிவரும் சரவணா பல
போட்டிகளில் பரிசுகளையும் வென்றிருக்கிறார். தமிழ்ச்சரத்தின் மலர்ச்சியால் தனது தளத்திற்கான வாசகர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறும் சரவணனுக்கு திரைத்துறையிலும் கொஞ்சம் அனுபவம் உண்டு. வாழ்த்துகள் சரவணன் !!