தேர்ந்தெடுத்த படைப்புகள்:
உலகம் யாவையும், 2021 ஏப்ரல், 14, கவிதை ஒரு கைவல்லியம்
Rammalar’s Weblog, 2021 ஏப்ரல், 13, நெய்தல் நிலக்காரி – கவிதை
நாகேந்திர பாரதி, 2021 ஏப்ரல், 10, அழுக்கின் அழுக்கு - கவிதை
மின்னற் பொழுதே தூரம்,2021 ஏப்ரல், 14, சாதியை ஒழிக்கும் ஒரு கனவுத் திட்டம்
சிறகை விரிக்கும் சிந்தனைகள், 2021 ஏப்ரல், 14 , மண்டேலா
அக்னிச் சிறகு.... (வைசாலி செல்வம்), 2021 ஏப்ரல், 14, வாசிப்பது எப்படி ....?
சுருதி, 2021 ஏப்ரல், 12, வாசிப்பு
தயாஜி வெள்ளைரோஜா, 2021 ஏப்ரல், 12, புத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல்
ஏன் தேர்ந்தேடுத்தேன் ? -தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்
அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம். இப் படைப்புகள் அனைத்தும் ஒரு படைப்பாளனின் மனிதம் எவ்வாறு இருக்கிறது, இருக்க வேண்டும் என அழுத்தமாகச் சொல்கின்றன.
*கவிதை என்பது ஒரு நாடோடித்தவம்...எனத் தொடங்கி ஐந்து பிரிவுகளாக கவிதையை கவிதை என்றால் என்ன அதன் குணமென்ன என எளிய வார்த்தைகளைக் கொண்டு அம்பேத்காரியத்தை தொடுகிறார் வே.அருள்
*ச.விசயலட்சுமியின் கவிதைகள் மீராவின் கவிதைகள்+கற்பனைகள்= காகிதங்கள் என்கிற கவிதைத் தொகுதியில் வருவதைப் போன்ற எளிமையான வரிகளின் காத்திரம் மிளிர்வதைக் காணலாம்.
*பெண்ணடிமை அழுக்கிற்கு கல்வியின்மை காராணமாம் எனக் கேள்வி எழுப்பும் கவியாளர் அன்றாடப் பிழைப்பிற்கே வழியில்லாதவனிடம் சாதி எப்படி நிலை கொண்டது என்கிற கேள்வியை எழுப்புகிறார் நாகேந்தர பாரதி.
*ஒரு நாள் முதல்வர் முதல்வன் திரைப்படம் போல ஒரு ஓட்டுத் தேவைக்கு எங்களை அணுகவும் என்கிற காத்திரச் சொல் மூலம் அமைந்திருக்கிறது பரிவை சே.குமார் அவர்களின் விமர்சனம்.
*சில புத்தகங்களை எழுதியவர்களுக்காகவே வாசிக்க வேண்டும் போல் இருப்பதில்லை. நம் கண் முன்னாலே அநியாயங்கள் பல செய்து, காறித்துப்ப வேண்டும் போல இருப்பவர்களின் – புத்தகங்கள் என்ன கனதியாக இருப்பினும் வாசிக்க வேண்டும் போல இருப்பதில்லை.
தொடர்வோம்...
No comments:
Post a Comment