Blogspot பயனாளர்கள் பலர் கூகுள் நிறுவனத்தின் ஃபீட்பர்னர் (Feedburner) சேவையைப் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த Feedburner சேவைப் பதிவர்களுடைய பதிவுகளைத் தானாக வாசகர்களுக்கு மின்னஞ்சல் செய்யும் வசதியைத் தந்து வந்தது.
இந்தச் சேவையால், பதிவர்களின் புதிய பதிவுகள் பல ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு தானாக சென்று சேர்ந்தது. ஆனால், சமீபத்தில் கூகுள் ஃபீட்பர்னர் வழியாக வழங்கி வந்த இந்த மின்னஞ்சல் சேவையை நிறுத்திக் கொள்வதாக (feed burner is going away) சமீபத்தில் அறிவித்திருக்கிறது. (காலக்கெடு ஜூன் இறுதி 2021)
அதனால், இமெயில் வழியாக பல நூறு வாசகர்களைச் சென்றடைய மாற்று வழி தேடுவது அவசியதாகிறது.
இது குறித்து இணையத்தில் தேடியபோது இந்தச் சேவையை தரமான முறையில் follow.it எனும் நிறுவனம் இலவசமாக செய்வதாக அறிந்தோம்.
விருப்பமுள்ளவர்கள் கிழே தரப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி follow.it - இன் சேவையைப் பெறலாம்.
Feedburner இலிருந்து follow.it க்கு எவ்வாறு மாறலாம் ?
1.முதலில் உங்களுடைய Feedburner கணக்கில் நுழையுங்கள் (www.feedburner.com) படம் கீழே
2. இந்தக் கணக்கில் இருந்து முதலில் உங்கள் மின்னஞ்சல் சந்தாதாரர்களுடைய மின்னஞ்சல் முகவரிகளைத் தரவிரக்கம் செய்ய வேண்டும். அதற்கு, சந்தாதரர்களின் எண்ணிக்கையைச் சொடுக்கவும் (click). மேலே உள்ள படத்தில் 17 (#).
படம் கீழே
இப்போது CSV எனும் இணைப்பைச் சொடுக்கி வரும் ஃபைலைத் தரவிரக்கம் செய்து உங்கள் கணினியில் சேமியுங்கள். இந்த வாசகர்களின் முகவரிகளைத் தான் follow.it தளத்தில் தரவேற்றம் செய்யவேண்டும்.
3. இனி, follow.it -இல் உங்களுடைய வலைதளத்தை பதிவு செய்யவேண்டும். அதற்கு முதலில் SignUp செய்யுங்கள். இதற்கு உங்களுடைய பழைய கூகுள் கணக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. பிறகு, Publishing -> Add Feed -ஐ அழுத்தவும்
5. உங்களுடைய தளத்தின் முழு முகவரியைக் கொடுக்கவும். உதா. https://tamilcharamblog.blogspot.com/
அடுத்த பக்கம்..
6. Continue-பொத்தானை அழுத்தும் போது, வரும் மாதிரி வடிவத்தின் (design) நிறம், எழுத்துகள் போன்றவற்றைத் தேவைப்பட்டால் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.
7. மீண்டும், Continue-பொத்தானை அழுத்தும் போது வரும் பக்கம் கீழே
8. இந்தப் பக்கத்தில் தரப்படும் HTML-ஐ பயன்படுத்தி உங்களுடைய வலைதளத்தில் புதிய கேஜெட் (gadget)-ஐ வடிவமைக்கலாம்.
உங்கள் வலைத்தளத்தின் -Layout-
9. HTML/JavaScript-ஐ பயன்படுத்தி (Copy & Paste) , புதிய கேட்ஜெட் வடிவமைத்த பின், உங்களுடைய வலைத்தளம் (படம்),
அதில் உங்களுடைய இமெயில் முகவரியைத் கொடுத்து, Subscribe-பொத்தானை அழுத்தி சோதனை செய்து பார்க்கலாம். அப்போது உங்களுடைய இமெயில் முகவரிக்கு follow.it , ஒரு Confirmation Email அனுப்பி இருப்பார்கள். (படம் கீழே)
அந்த இமெயில் Spam-போல்டருக்குச் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்
பிறகு இமெயிலை உறுதி செய்யவும். இனி, புதிய பதிவுகள் உங்களுடைய இமெயில் முகவரிக்குத் தானாகவே வந்தடையும்.
இந்த இமெயில் Subscribe வேலையை, மேலே நீங்கள் உங்களுடைய முகவரிக்குச் செய்தது போல. நீங்கள் உங்களுடைய எல்லா வாசகர்களின் இமெயில் முகவரிக்கும் செய்யவேண்டும் (CSV) . பிறகு, மேற்கண்ட வாசகர்கள் தங்களுடைய இமெயிலுக்கு சென்று follow.it -இல் இருந்து வந்த அந்த இமெயிலை உறுதிசெய்யவேண்டும்.
இவை அனைத்தும் சரியாக செய்யப்பட்டால், நீங்கள் follow.it-இன் சேவையை பயன்படுத்தலாம்.
உதவி-Reference- https://follow.it/docs/publishers/getting-followers/how-can-i-switch-from-feedburner-to-follow-it
மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் ... வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுயற்சிக்கிறேன். நன்றி.
ReplyDeleteபீட்பர்னருக்குச் சரியான மாற்று தேடிக் கொண்டிருந்த பதிவுலகுக்கு இவ்வளவு அருமையான, எளிமையான புதிய தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு முதலில் நன்றி தோழரே!
ReplyDeleteஆனால் வழிகாட்டலில் ஒரு பிழை இருக்கிறது.
சோதனைக்காக நம்முடைய வேறு மின்னஞ்சல்களில் ஒன்றையே கொடுத்துப் பார்க்கச் சொல்லி நீங்கள் பரிந்துரைத்திருப்பது வரை சரிதான். ஆனால் பீட்பர்னரிலிருந்து தரவிறக்கிய மின்னஞ்சல் முகவரிகளையும் அதே வழியில் நீங்கள் பதிவேற்றச் சொல்லியிருப்பது மிகவும் தவறு!
அப்படிச் செய்தால் நம் வலைப்பூவைப் பின்தொடர்வது குறித்து உறுதிப்படுத்துமாறு அவர்கள் அனைவருக்கும் மீண்டும் மின்னஞ்சல் (confirmation mail) செல்லும். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே நம் வலைப்பூவை மின்னஞ்சல் மூலம் தொடர பீட்பர்னர் வழியே விண்ணப்பம் அளித்து, இப்படி உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் வரப் பெற்று, அதையும் உறுதி செய்து விட்டவர்கள். அவர்களுக்கு இப்படி மீண்டும் உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பினால் அது குழப்பத்தை ஏற்படுத்தும். அது மட்டுமில்லை அவர்களில் பலர் உறுதிப்படுத்தத் தவறவும் வாய்ப்பு உண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக இப்படி நாமே ஒவ்வொரு மின்னஞ்சலாகப் புதிதாகப் பதிவு செய்தால் நம் மின்னஞ்சல்கள் எரிதங்களாக (spams) வகைப்படுத்தப்படும் கண்டமும் (danger) உண்டு.
பீட்பர்னரிலிருந்து நாம் தரவிறக்கிய மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவேற்றம் செய்ய முறையான வழியை பாலோ-இட் நமக்கு வழங்குகிறது. ஆனால் அதை இங்கு விவரிப்பது கடினம். விரைவில் காணொளியாக வெளியிடுவேன்.
நன்றி!
https://agasivapputhamizh.blogspot.com
நன்றி !
Delete