Monday, March 29, 2021

தமிழ்ச்சரம் - தேர்ந்தெடுத்த படைப்புகள்- March 28, 2021

 தேர்ந்தெடுத்த படைப்புகள்:

 வளரும்கவிதை, 2021 மார்ச் 16, மக்கள் தமிழ் கொச்சைத் தமிழா?

மின்தமிழ் மேடை, 2021 மார்ச் 15, வரலாற்றில் கிண்ணிமங்கலம்

கொல்லாபுரம்.காம்,2021 மார்ச் 26, சும்மா...

ஏன் தேர்ந்தேடுத்தேன் ?  -தமிழ்த்தேசன் இமயக்காப்பியன் 

வணக்கம்,

கொச்சைச் சொற்கள் குறித்த இக்கட்டுரை நாம் படித்தவையே என்றாலும் மீள் வாசிப்பு என்பது எழுதாத எழுத்தாகிய மலரும் நினைவுகள் போன்றது. மீள் வாசிப்பு என்பது திரையிலும் உண்டு. பழைய படங்களை புதிதாக எடுக்கும் பாணி தற்பொழுது சற்றே அல்ல முழுவதுமாக குறைந்து விட்டது. திரையின் உண்மையான மீள்வாசிப்பு என்பது பெருங்கதைகளை படமாக்குவது. காட்பாதர் திரைப்படத்தை காலந்தோறும் மீள் வாசிப்புத் திரையாக்கும் போது தலைமுறை இடைவெளியின் தன்மையை அசைக்காமலேயே அசைக்கிறது.

காலங்காலமாக கொச்சைச் சொற்களின் பிரதிநிதிகளாக கல்லூரி பல்கலையில் பேராசிரியர்களாக அமர்த்தப்படுகின்றனர். அந்த வகையில் தற்பொழுது தஞ்சை தமிழ் பல்கலையில் சி.எம். முத்து, நேற்றுவரை கீ.ரா. அல்ல என்றும் இதன் தலைமை சிற்பி. கரிசல், பாண்டியின் கடலில் எழுதும் தடுமாற்றமில்லாத அழகிய கோலம். 20ஆண்டுகளுக்கு முன்னால் திருவனந்தபுரம் பல்கலையில் 70வயதான ஒரு பெண்ணை இத்துறையில் பேராவாக அமர்த்தியிருந்தனர். கே.ஏ. குணசேகரன் சொல்வார் *ஏ சின்னாத்தா கொல்லங்குடியாரு என்னை விட அதிகம் படித்த மக்களின் பேரா என்பார்.சிவப்புத் தோலுக்குத்தான் விருது கொடுப்பாக எனச் சலிப்பும் வருத்தமுமாக சொன்ன கொல்லங்குடியாருக்கு ஒரு திரையின் சிவப்பு ஆளுமையே அந்த விருதைக் கொடுத்தது. தனிமை விரும்பி ஜெ அவர்கள் ஆங்கிலத்தைப் போல தமிழையும் வாசித்திருந்தால் நம் ஔவைகள் மூன்று வேளை சாப்பிட்டிருப்பார்கள்.ஆனாலும் எல்லா வாசிப்பிலும் மனிதர்கள் வருவதும் போவதுமாக இருப்பது தனது இறுதிக்காலத்திலேயே தெரிந்திருக்கிறது.கொச்சை என்றும் பச்சையுமல்ல இச்சையுமல்ல அது வாழ்வின் ஆன்மா, ஆலோசனையின் பீடமல்ல கருவின் குரு. நாள்தோறும் நாட்டுப்பாடல் பிரசவிப்பது போல நாள்தோறும் கொச்சைகள் பிறக்கும். தொறப்புக் குச்சி(அகராதி) உண்டுதாங்க

*சில ஆயிரம் வருடங்களுக்கு முன், திருபூலா நந்தீஸ்வரபுரத்தில் (இன்றைய சின்னமனூர்) சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர் அருளானந்தம். அப்போது, பழனி போகரின் சீடர் புலிப்பாணியின் இரண்டாவது சீடரிடம் பயிற்சி பெற்ற 17 பேர், மானசரோவர் அனுப்பப்பட்டனர். ரிஷிகளின் வழியில் பயிற்சி பெற்ற அச்சீடர்களில், அருளானந்தம் மட்டும் சதுரகிரி யமவனத்தில், மணிப்புறா வாழும் பாறையில் தவம் செய்தார். அதன்பிறகு, நாகமலை நடுப்பகுதியில் காகபுஜண்டர் சித்தர் தவம் செய்ததாகக் கூறப்படும் குகை ஒன்றில் இறுதி தவம் செய்தார். அந்த அருளானந்தமே பின்னாளில் சத்குரு என்றழைக்கப்பட்டு, கிண்ணிமங்கலத்தில் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்குக் கீழ் ஜீவசமாதி அடைந்தார். அவருடைய சீடர்களான மாணிக்கவாசக தம்பிரான் கன்னி மூலையிலும், சபாபதி தம்பிரான் வாயு மூலையிலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.

ஏகநாதர் கோவில் மண்டபத்தின் கீழ் நவபாஷான கிண்ணி உள்ளது. கோவிலைச் சுற்றி 16 சீடர்களும் ஆனந்தவல்லி அம்பாளின் 16 கோணங்களில் அமைந்துள்ளனர். இவர்களில் மூன்றாவது சீடர்தான் இக்குருகுல மடத்தை ணஉருவாக்கினார். இவர் திருமணம் செய்து, தன்னுடைய சுற்றத்தாருக்காக ஊரை உருவாக்கி, கிண்ணிமங்கலம் என்றும், இம்மடத்தினை கிண்ணிமடம் எனவும் பெயர் சூட்டி, 117 -ஆவது வயதில் சமாதி அடைந்தார். இவருடைய வாரிசுகளின் வழிவந்த குருவழித் தொண்டராக இருக்கிறார் மு.அருளானந்தம். இங்கே மடத்தின் பாடத்திட்டங்களாக, 16 கலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வித்தைகளும் இலவசமாக, வெளிப்படையாக, இரண்டு தசமி திதிகளிலும் கற்றுத் தரப்படுகின்றனராகு – கேது பெயர்ச்சி நாளான இன்று, ஏகநாதர் கோவிலில் கோ பூஜை நடத்தியதும், பசுவுக்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழங்களை பக்தர்கள் ஊட்டினார்கள். சிறப்பு யாகத்தில் கலந்துகொள்ள வந்திருந்த வெளியூர் பக்தர்களுக்கும், கிண்ணிமங்கலம் ஊர் மக்களுக்கும், கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது

கிண்ணிமங்கலம் கல்வெட்டில் எழுப்பட்டிருக்கும் ஏகன் ஆதன் சொற்கள் குறித்து ஆய்வாளர்கள் பலர் ஆதன் நாதன் ஆன கதையென பல நூறு பதிவுகளாக வெளியிட்டு சிறப்புச் செய்திருக்கின்றனர்.. தமிழில் சொக்கன் ஆதன்  சொக்கனாதனாக திரிந்ததையும், கதிரைவேற்பிள்ளையின் தமிழ் பேரகராதியில் ஆதன் என்கிற சொல்லுக்கு அருகன்,அறிவிலான், உயிர்,குரு,குருடன் என பொருள் விரித்துரைப்பதையும் ஆதன் தொடர் சொற்களையும் சிலர் பட்டியலிடுகின்றனர் அதன்படி ஆதனூர்,ஆதனம்,ஆதனமூர்த்தி, ஆதனை மாதளை. தமிழச்சி அருகன் என்கிற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதினார். ஆதனூர் சோழன் என்கிற பெயரில் ஒருவர் எழுதுவதையும் சிலர் சுட்டுகின்றனர். காலங்காலமாக தமிழகம் தொல்லியலின் பீடமாகவே இருந்தாலும் அதை வெளிக்கொணர்வதில் நாம் அரசுகளின் வேண்டாத நிறமாகி விடுகிறோம். எதையும் நீ உருவாக்கி இருந்தால் தானே அழிவதற்கு ஆகையால் நம் மொழி அழிவதில்லை அழிப்பா(ரி)றில்லை என நிமிர்வோம் ஔவைகளாய். தோண்டினால் கிடைப்பது தமிழென்றால் வாய்திறத்தலால் வரும் ஒலி அ* என்கிற தமிழ்காற்றாகத்தான் இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம். புலித்தலைமை மொழி/வீரம் குறித்து பாரிய அளவில் கல்வெட்டுக்களை புதைத்துச் சென்றுள்ளனர். பிற்காலத்தில் ஆழத் தோண்டும் போது கிடைப்பது இவை இரண்டும் என்பதில் ஆய்வாளர்கள் பேரெழுச்சி கொள்வார்கள் என நம்புகிறேன். புதையல் நூலகமும் கிடைக்கலாம் அது கற்களா?  காகிதமா? இரண்டிலும் எம் மண்ணிருக்கும் என்பதை நீங்கள் அறியலாம்.

*புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்

எதிர்வு என்ற இதழொன்றிர்க்கு பேராசிரியர் பஞ்சு எழுதியுள்ள இக்கட்டுரையைக் காவ்யா வெளியிட்டுள்ள நவீன இலக்கிய கோட்பாடுகள் கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. பின் நவீனத்தின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவும். நவீனம் என்ற சொல்லுடன் இணைந்த கலையும் இலக்கியமும் அதன் பிறப்பு தொட்டு ‘புரியவில்லை’ என்ற சொல்லை எதிர்கொண்டு வந்திருக்கின்றன. இவற்றுள் திறனாய்வாளர்கள், கலை விமர்சகர்கள் அபூர்வாமானது, மெய் சிலிர்க்கவைப்பது, பிரம்மிக்க வைப்பது என புளகாங்கிதமடைகிற படைப்புகள் கூட இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயின என்பதும் உண்மை.

இரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் தமது புதிய நாவலொன்றை அனுப்பி எனது கருத்தைக் கேட்டிருந்தார். அதனை விமர்சனமாக எழுதினால் இதழொன்றில் பிரசுரிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்நண்பர் அண்மையில் வெளிவந்திருந்த எனது புதிய நாவல்குறித்த ஒரு மதிப்புரையை இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பியிருந்தார், நாவலைப்பற்றிய உயர்வானக் கருத்தை அதிற் பதிவு செய்திருந்தார். பதிலுக்கு அவர் நாவல் குறித்து அதே பார்வையுடன் உயர்வாக எழுதவேண்டும் என்பது தமிழ்ப் புனைகதை உலகின் எழுதப்படாத விதி. நண்பரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, அவருடைய நாவல் குறித்து எதிர்மறையான கருத்துக்களை அனுப்பிவைத்தேன். இதில் ஓர் உண்மைப் பொதிந்துள்ளது. நண்பரின் என்னுடைய நூலைப்பற்றிய நேர் மறையான விமர்சனத்தை எப்படி ஒட்டுமொத்த வாசகர்களின் ஏகோபித்த கருத்தாகக் கொள்ள முடியாதோ அதுபோலவே நண்பரின் நூலைப்பற்றிய என்னுடைய எதிர்மறையான கருத்தையும் ஒட்டுமொத்த தமிழ் வாசகர்களின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. மனிதர்க்கு மனிதர் அவரவர் வாசிப்பு திறன்சார்ந்து எடுக்கின்ற முடிவு தனித்தன்மைக் கொண்டதாக இருக்கக்கூடும். இங்கே நூலை வாசிக்காமலேயே இகழும் கூட்டத்தையோ, வேண்டியவர் எழுதினார் எனவே நன்றாக இருக்கிறது என எழுதும் கூட்டத்தையோ கணக்கிற்கொள்ளவில்லை. எது எப்படி இருப்பினும் பிறரின் அபிப்ராயத்தைக்கொண்டு ஒரு நூலைப் பற்றிய எவ்வித முன் முடிவுகளையும் எடுப்பது சரியல்ல. கலையும் சரி இலக்கியமும் சரி வெறும் அறிவுசார் வெளிப்பாடுகளோ முடிவுகளோ அல்ல, அவை புலன்களோடும் கலந்தவை. ஓர் பாடல் ஒருவருக்கு இனிமையாகவும் மற்றவருக்கு பெரும் ஓசையாகவும், ஒரு நடிகன் ஒருவரால் விரும்பப்படவும், பிறரால் தூற்றப்படவும், ஒரு பண்டம் ஒரு நாவிற்குச் சுவையாகவும் பிறிதொன்றிர்க்கு வேண்டாததாகவும் இருப்பதைப்போலவே கலையும் இலக்கியமும் இரண்டுபேரில் ஒருவருக்கு ஏற்கக்கூடியதாகவும் மற்றவர் நிராகரிக்கக் கூடியதாகவும் இருக்கக்கூடும். பொதுவில் புலன்சார்ந்த விருப்பு வெறுப்புகள் அனைத்துமே, ஒரு மனிதனைக் கட்டமைக்கிற இயற்கை மற்றும் சமூகக் கூறுகள் தீர்மானிப்பவை. எனவேதான் ஒரு ஓவியத்தையோ, சிற்பத்தையோ, கவிதையையோ, கதையையோ விமர்சிப்பதாகக் கூறி முன்வைக்கப்படும் ‘புரியவில்லை’ என்ற பதத்தையும் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது.

பஞ்சுவைக் காட்டிலும் வேறொருவர் இச்சொல்லை இத்தனை நுணுக்கமாக ஆழமாகவும் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கமுடியாது. தீர்ப்பினை முடிவுசெய்தபிறகு குற்றவாளியை விசாரணக்கு உட்படுத்துகிற ராணுவ அல்லது புரட்சி நீதிமன்ற நடைமுறைகள் அவர் இயல்புக்கு மாறானவை என்பதை அறிவோம். இக்கட்டுரையிலும் அந்நேர்மைக் காப்பற்றப்பட்டுள்ளது. நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நியாங்களும் அவற்றுக்குரிய வாதங்களும் ‘புரியவில்லை’ யின் பொருட்டு தெள்ளத்தெளிவாக மக்கள் மன்றத்தில் வைக்கப்படுகின்றன.

கலைஞன்-படைப்பு-சுவைஞன்

“ஒரு இலக்கியத்தை- ஓவியத்தை – அனுபவிப்பதற்கு முழுதும் புரியவேண்டும் என்பது அவசியமில்லை என்று டி.எஸ் எலியட்டின் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாமா” என்று கட்டுரையின் தொடக்கத்தில் அச்சுறுத்துவதுபோல ஒரு கேள்வியை ஆசிரியர் எழுப்பினாலும், அவர் அப்படிச்செய்யக்கூடியவரல்லர் என்பதும் நாம் அறிந்ததுதான். தொடர்ந்து ‘புரியவில்லை’ என்பவர்களுக்கு ஜெயகாந்தன் அளித்த பதிலென்று கட்டுரையில் இடம்பெற்றுள்ள வரிகள் சுவாரஸ்யமானவை: « நீங்கள் படிப்பது உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது உங்களுக்கு எழுதப்பட்டது அல்ல; வேறு யாருக்கோ எழுதப்பட்டது என்பதுமா உங்களுக்குப் புரியவில்லை? புரியவில்லையென்றால் பேசாமல் விட்டுவிடுங்களேன் ». இப்பதிலில் இருக்கிற நியாயத்தின் விழுக்காடுகள்பற்றி கேள்வி எழினும், ஜெயகாந்தன் குரலில் அதனைக் கற்பனை செய்துபார்க்கிறபோது நமக்கு பேதி காண்கிறது. ஜெயகாந்தனிடம் கேள்வியை வைத்த நபர் நொந்துபோயிருப்பார் என்பது நிச்சயம். டி. எஸ் எலியட் கூறியதைத்தான் ஜெயகாந்தன் அவருடைய பாணியில் தெரிவித்திருக்கிறார்.

« ‘கலைஞன்-படைப்பு-சுவைஞன்’ இந்த மூவரும் ஒரே ரத்த ஓட்ட மண்டலத்தில் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதால் ஒன்றில் குறை ஏற்பட்டாலும் கலையிலும், கலை அனுபவத்திலும் குறை ஏற்படத்தான் செய்கிறதென்றும், பார்வையாளனை நினைவில் வைத்துப் படைக்கப்படும் படைப்பு எவ்வாறு தோல்வி காணுமோ, அவ்வாறே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கப்படும் படைப்பும் தோல்வி காணத்தான் செய்யும் » என்கிற பேராசிரியரின் கருத்தின் பிற்பகுதியை முழுமையாக ஏற்றுக்கொள்ள எனக்குத் தயக்கம்.

உண்மையில் சந்தை உலகில் நுகர்வோனுடைய ரசனைக்கேற்ப அல்லது அப்படி நம்பவைத்து கலையை, இலக்கியத்தை விற்கத்தெரிந்தவர்களின் சரக்குகள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவர்களுக்குத் தோல்வி அரிதாகத்தான் ஏற்படும். அதுபோலவே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கும் படைப்பும் தோல்வியைக் காணும் என்பதிலும் எனக்கு முழுமையாக உடன்பாடில்லை. பொதுவாக நல்ல இலக்கியங்கள் வாசகனை வாசலில் நிறுத்திக்கொண்டு கைகுலுக்க எழுந்து வருவதில்லை, மாறாக அது வீதிக்கு வந்ததும் எதிர்ப்படும் முகங்கள் தெரிந்த முகங்களாக இருந்தால் கை குலுக்குகிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் நல்ல படைப்புகளாக இருந்தாலுங்கூட அரசியல்வாதி நடைபயணம்மேற்கொள்கிறபோது ஆட்களைத் திரட்டுவதுபோல வாசகர்களைத் திரட்டும் சாமர்த்தியம் இருப்பின் அவர்தான் இலக்கியசந்தையில் ‘பெஸ்ட் ஸெல்லெர்’. ஆக இங்கு ‘புரியவில்லை’ என்ற பிரச்சினைகள் எழவாய்ப்பே இல்லை. இங்கு படித்து புரியவில்லை என்பவர்களை காட்டிலும், படிக்காமலேயே ‘புரிகிறது’ என்று சொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள் (இதற்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் தேடிக்கொண்டிருப்பது வீணற்ற வேலை). ஆகையால் ஆக இதுபோன்ற வாசகர்களை வலைவீசிப்பிடிக்கும் சாதுர்யம்கொண்ட எழுத்தாளர்கள் வாசகர்களை அறவே மறந்துவிட்டும் எழுதலாம்.

‘புரியவில்லை’ யார் காரணம்?

’புரியவில்லை’ பிரச்சினை எதனால் எழுகிறது, யார் காரணம் வாசகனா? படைப்பாளியா? என்று கேள்விக்கு இருவிதமான ‘புரியவில்லை’களைத் தெரிவித்து, இரண்டுபேரையுமே குற்றவாளிகள் என்கிறார் ஆசிரியர். முதலாவது ‘புரியவில்லை’ படைப்பாளிகளால் உருவாவது: « புதியபாதை போடுகிற – சோதனை முயற்சியில் இறங்குகிற- கலை படைப்புகளை ஒட்டி » – என்கிறார் பஞ்சு. அடுத்தது வாசகர்களிடமிருந்து உருவாவது: « ஐன்ஸ்டீன் ‘சார்பு நிலைக் கொள்கை’ புரியவில்லை என்றால் அதைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு, அந்தத் துறையில் தனக்குக் கல்வி அறிவு போதாது என்று சரியான முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் ஓர் ஓவியமோ, ஒரு கவிதையோ புரியவில்லையென்றால், இது ஒரு மோசமான ஓவியம் (அ) கவிதை என்று உடனே மதிப்பிட்டு முடிவு கூறிவிடுகிறார்கள் » (பெட்ராண்ட் ரஸ்ஸல் கூறியதாகக் கூறப்படுகிறதென்று – ஆசிரியர் தெரிவிக்கிறார்). 


முதலாவதாகச் சொல்லப்பட்ட « முயற்சியில் இறங்குகிற கலைஞன், அர்ப்பணிப்புத் தன்மையோடு செயல்படும்போது, படைப்போடு தன் பணியைச் சுருக்கிக்கொள்ளாமல், தன் பாதையை மற்றவர்களுக்கும் பழக்கப்படுத்தவேண்டிய நெருக்கடியான கடமையையும் மேற்கொள்கிறான். தன் பாதையை ஓர் இயக்கமாக்குகிறான். அவன் ஒரு சமூக இயக்கத்தோடு இணையும்போது அவன் கடமை எளிதாகிவிடுகிறது. அவன் படைப்புத் தன்மை மரபாகி விடுகிறது »- என்கிறார்.

எப்போது புதிய முயற்சி மரபாகிறது என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒரு சமூகத்தில் ஒருவரோ சிலரோ கூடி அறிமுகப்படுத்தும் சடங்கு தம்மில் பெரும்பான்மையோரின் நன்மைக்கு உதவும் என நம்பிக்கையை விதைக்க முடிந்தால் அச்சடங்கு மரபாகிறது. மேற்குலகில் கலையில் இலக்கியத்தில் மேற்கொண்ட பல சோதனை முயற்சிகள் பின்னாளில் ஆதரவற்றுபோனதற்கு பெரும்பாலான இலக்கியவாதிகளின் நம்பிக்கையை அச்சோதனை முயற்சிகள் பெறாததே காரணம். மாறாக ரஸ்ஸல் கூற்றென்று சொல்லப்பட்டதை ஆசிரியர் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. « புரியாததற்கு கலைஞன் பொறுப்பில்லை; வாசகனின் கலை அறிவு போதாமையே என்று ஒரே அடியாகச் சொல்லிவிடலாமா? « எனக்கேட்கிறார். பேராசிரியர் கூறுவதைப்போல ஐன்ஸ்டீனுடைய ‘சார்பு நிலைக்கொள்கை’ யைப் பொருளாதாரம் படிக்கும் மாணவன் தனக்குப் “புரியவில்லை” எனக்கூறினால், உனக்குப் புரியாது அதற்குரிய கல்வி உனக்கில்லை எனக்கூறிவிடலாம், ஆனால் பௌதிகம் படிக்கும் மாணவன் புரியவில்லையென்றால் அவனுக்குப் புரியும்படி அவனுடைய பேராசிரியர் போதிக்கவில்லை என்றுதானே பொருள்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளாக இலக்கியத்துடன் பரிச்சயம் உள்ள, ஆழமான வாசிப்பு உள்ளவர்கள் நேர்மையாக புரியவில்லைஎன்று சொல்கிறபோது அவர்களின் கருத்தை படைத்தவர் கவனத்திற்கொள்ளவேண்டுமே தவிர, பஞ்சு கூறுவதைப்போல வாசகனின் கலை அறிவு போதாமையைச் சாக்காகச் சொல்லி, படைப்பாளி நழுவ முடியாது.

கலை மக்களுக்காக?

வேறொரு கேள்வியையும் கட்டுரை ஆசிரியர்வைக்கிறார்: “ஓரளவு கலைகளோடு பர்ச்சயம் உள்ளவர்களுக்கே ‘புரியவில்லை’ என்ற நிலை ஏற்படும்போது, பொது மக்களின் நிலை என்ன? எந்த மக்களின் நலனுக்காகப் படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறதோ, அந்த மக்களுக்கு இது புரியுமா? ” எனக் கேட்கிறார். இதுவும் நியாயமான கேள்விதான். எல்லா மக்களுக்கும் படைப்பு போய்ச்சேரவேண்டியதுதான். ஆனால் இதில் சில ஐயங்கள் எழுகின்றன. எல்லோரும் சாப்பிடவேண்டும் என்று இலைபோடுகிறோம். பசி இருக்கிறவன், உட்காருகிறான், சாப்பிடுகிறான். உட்காரமாட்டேன், சாப்பிடமாட்டேன் என்பவனை என்னசெய்வது. நாம் இலைபோடமுடியும், உணவை பரிமாறமுடியும், உண்பதற்கு வாசகன்தான் முயற்சிகள் எடுக்கவேண்டும். ஆக இந்த ‘புரியவில்லை’ பிரச்சினையை எழுத்தாளர் -வாசகர் இருவருமே புரிந்துகொண்டு இறங்கிவரவேண்டும், இப்புரிதல் இருவருக்குமே உதவும்.

‘புரியவில்லை’ – தீர்வுகள்

புரியவில்லை என்ற பிரச்சினைக்கு பேராசிரியர் சில தீர்வுகளையும் முன்மொழிகிறார். அவற்றுள் ஒன்று புரியவில்லைக்கு எதிர்சொல்லான புரிதலைத் தனிப்பட்ட ரசனையோடு பொருத்திப் பார்க்காமல் செயல்பாட்டுடன் சம்பந்தப்படுத்திப்பார்த்தல். « பாரதியின் பாடல்களைப் படித்துவிட்டு சுரண்டும் அமைப்பிற்கு சேவகம் செய்த-செய்கிற- பழம்பெரும் படிப்பாளிகளைவிட தெருவில் ‘அச்சம் இல்லை அச்சம் இல்லை!’ என்று பாடிக்கொண்டுபோன பாமரர்கள்தாம் பாரதியைச் சரியாக புரிந்துகொண்டார்கள் »- என்று கூறுகிறபோது, நாம் வாயடைத்துபோகிறோம். பஞ்சு கூறுவதைப் போலவே ரூஸ்ஸோவின் ‘சமூக ஒப்பந்தம்’ நூல் பெருமை பெற்றது அதனைப் புரிந்துகொண்டவர்களால் அல்ல, அதனைப் புரட்சியாகச் செயல்படுத்தியவர்களால் என்ற உண்மை பேராசியரின் கருத்திற்கு வலு சேர்க்கிறது. இரண்டாவது தீர்வாக பஞ்சு முன் வைப்பது. ‘பயிற்சி’: « தர்க்கமற்ற மிகவும் சிக்கலான ஒரு மொழி அமைப்பை குழந்தையொன்று பயிற்சியில் தன்மயமாக்கிக் கொள்வது போல, படைப்பைப் புரிந்துகொள்வதிலும் இந்தப் பயிற்சிக்குப் பங்குண்டு. 

இலக்கியம் படைப்பது பழக்கமாகிப்போவதுபோல, இலக்கியத்தைப் புரிந்துகொள்வதும் பழக்கமாகிப் போய்விடவேண்டும »-என்கிறார். தவிர ‘புரியவில்லை’ என்பதைத் தவிர்க்க ‘முயற்சி’யும் இன்றையமையாதது எனக்கூறி புரிந்துகொள்வதில்லுள்ள ஐந்து தளங்களைக் குறிப்பிட்டுள்ளார் 1. ஒரே பார்வையில் உடனடியாகப் புரிந்துகொள்வது. 2. தன் அனுபவ அடிப்படையில் புரிந்து கொள்வது. 3. தன் கொள்கை அடிப்படையில் புரிந்துகொள்வது 3. கலா பூர்வமாய் புரிந்துகொள்வது 5. நாம் அறியாமலேயே நமக்குள் வாய்க்கும் மரபு அடிப்படையில் புரிந்துகொள்வது. புரிதல் அனைந்துமே இவற்றில் ஏதாவதொன்றின் உதவியுடன் நடப்பதென்பது ஆசிரியரின் கருத்து.

இறுதியாக இலக்கியத்தைப் புரிதல் என்பது மொழியைப் புரிதல் மட்டுமல்ல, மனிதன் தன்னை, தனது சமூகத்தை, தன்கால சமூக இயக்கங்களின் சாரத்தை, தன் பிழைப்பை, இசை ஓவியம் முதலிய பிறகலைகளைத், துறைகளைப் புரிதல் என முத்தாய்ப்பாக ஆசிரியர் தரும் விளக்கம் கோடி பெறும்.

சும்மாவா இருந்தேன்!சும்மாவா இருந்தேன்!!


அம்மியடில கும்மியடிச்சேன் ஆட்டுக்குட்டிக்கு ஆறூதல் பண்ணினேன்

சோளச் சோறு தின்னமாட்டேன் சொன்னபடி கேக்கமாட்டேன்

கம்பு இடிக்க மாட்டேன் கம்மங்கூழு குடிக்க மாட்டேன்

கெவுரு(கேழ்வரகு)இடிக்க மாட்டேன் கெவுரு கூழு குடிக்க மாட்டேன்

சோம்பேறி பையன் கூட /சேந்து நானும் சுத்த மாட்டேன்

நரச்ச கெழவன் கூட நண்பனா/ சுத்த மாட்டேன்

சும்மாவா இருந்தேன்!சும்மாவா இருந்தேன்!!

மழவருது மழவருது நெல்ல அள்ளுங்க/முக்காபடி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க/ஏறு ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்க/சும்மா இருக்கிற மாமனுக்கு சுடு போடுங்க 

இப்படி நம்மில்தான் எத்தனைச் சும்மா-க்கள்...

மீண்டும் அடுத்த மாதம் மையத்தில் சந்திப்போம்.நன்றியும் நல்வணக்கமும்

-தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

Friday, March 19, 2021

சு.சமுத்திரம் நினைவு சிறுகதைப் போட்டி - 2021

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நினைவில்  'சு.சமுத்திரம் நினைவு சிறுகதைப் போட்டி' அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் போட்டிக்கான உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்க கடைசி நாள் மார்ச், 30, 2021. போட்டி குறித்த மற்ற மேலதிக விவரங்கள் கீழே.


 பங்கேற்ப்பாளர்கள் அனைவருக்கும் தமிழ்ச்சரத்தின் வாழ்த்துகள் !!

Sunday, March 14, 2021

தமிழ்ச்சரம் - தேர்ந்தெடுத்த படைப்புகள்- March 14, 2021

தேர்ந்தெடுத்த படைப்புகள்:

கரந்தை ஜெயக்குமார் 07/02/21, கூடு திரும்புதல்

சுவனப்பிரியன் 12/02/21 , குட்டி வரலாறு-எதுவும் மாறவில்லை

Neer kondae Entammal Venkudusamy Naidu 13/02/21, பாட்டி சொல்வாள்

புத்தகசாலை 13/02/21, மாமனிதம்

வணக்கம்,

ஏன் தேர்ந்தேடுத்தேன்?

கடந்த 10நாட்களாக இவ்விணையத்திற்குள் நல்லருமருந்துப் படைப்புகள் கிடைக்கும் எனத் தேடிய போது தகவல் பதிவுகளாகவும் விரல்கள் இல்லாத பதிவுகளாகவும் இருந்தன என்கிற போது பாடசாலை பொத்தகத்தில் உள்ள வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்கிற மனித உயர்வரியைப் படித்து என்ன பயன்.

*மூலதனம் என்கிற நூலை எழுதிய தியாகு மூலதனமே இல்லாமல் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்

எந்த வருமானமும் இன்றி தாலியை அடகு வைத்து பொத்தகம் போட்ட சாரு நிவேதிதா எழுதிக்கொண்டு தான் இருக்கிறார். 

எழுத்தே என் வாழ்வும் வருமானமும் என்கிற எஸ்ரா நாள்தோறும் எழுதுகிறார். என் பசியைப் போக்க இரண்டு ரூபாய் கொடுக்க இச்சமுகத்தில் யாருமில்லை ஒரு பாதசாலைக்காரனைத் தவிர ஆனால் நான் உங்களுக்காகத் தான் எழுதுகிறேன். நான் பாதசாலை மனிதர்களின் இரசிகன் பாடகன் போதகன் ஆனால் நீங்கள் பாடசாலை மனிதர்கள்.

உழைப்பு, வயிறும் வாயும் உண்ணும் பொருளாதாரம் மட்டும் அல்ல நூற்களை உண்ணும் பொருளாதாரமும் கூட  நம் கதை சொல்லும்  பருக்கை நிலவுக்கு மட்டுமா சொந்தம் அவை நினைவுகளுக்கும் சொந்தமல்லவா

தேர்தல் காலம் கொரானாவை பின்னுக்குத் தள்ளி இருந்தாலும் நம் நடையை வாகனத்தில் ஏற்றிச் செல்ல நாம் மறப்பதில்லை. நொடங்கிய இடத்தில் சீரகம் மடித்த ஒரு புத்தகத் தாளில் என்ன இருக்கிறது என நாம் படிப்பதில்லை.. ஓஹோ... அதை ஞெகிழிக் கைப்பற்றி ரொம்ப நாளாச்சு என எதிர்க்கதை சொல்பவர்கள் ஏராளம்.

எழுதுவதால் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தை மீறி எழுதுபவர்களுக்கு மத்தியில் நாம் வாழவில்லை. அப்படியான சம்பவங்களையும் நாம் கையிலெடுக்க துணிந்தவர்களும் அல்ல. நம் தடை நூல்கள் எல்லாமே என் ஜாதியைக் கேவலப்படுத்தி விட்டான் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை.

பாடசாலை நூல்களை படிக்க குழந்தைகளுக்கு நேரமில்லை. விளையாடவும் நேரமில்லை என முரண்பட்ட உலகில் இலவச தேர்ச்சி சமூகத்தை குதுகளிக்க வைக்கிறது. தேர்வில்லா தேர்ச்சியில் இருக்கும் மகிழ்ச்சி தேர்தலில்லா தேர்ச்சியில் இருக்கும் என நீங்கள் கனவுகாணக் கூடாது. ஆனால் அதன் மைய இருப்பை நோக்கி அரசியல் அபிலாஷைக் கொலைஞர்கள் நகருகிறார்கள். அதன் உறுப்புதான் ஆண்ட கொடியர்களின் இத்தேர்தல்.   

நோயுற்ற மனிதன் வாசித்தால் உடல் சீராகும் என மூளை நரம்பியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால் நோயாகவும் நோயற்றவர்களாகவும் அச்சத்துடன் அவரவர் அறைகளில் நொடங்கிய போதுகூட ஒரு நூலை வாங்கி வாசிப்போம் என்கிற இருத்தலை தொலைத்த உலகைக் காண்கிறோம். 

ஒரு படைப்பு தேறுமென்றால் அதை உதய சூரியனென்று சொல்லலாம். இரண்டு படைப்பு தேறுமென்றால் அதை இரட்டை இலை என்று சொல்லலாம். மூன்று படைப்பென்றால் அதை முரசு என்று சொல்லலாம்(கொட்டு 1 குச்சி 2) நான்கு படைப்பென்றால் நாலு கையோ ஐந்து கையோ இணைந்த மக்கள் நீதி மையத்தைச் சொல்லலாம். உணவே இல்லாமல் ஒருவன் எழுதிக் குவித்திருந்தால் முரசரைந்து சூரிய வெளிச்சத்தில் இலையைப் போட்டு விசிலடித்து குக்குர் சோற்றைப் போட்டு பருக்கை நூலை பக்கத்தில் வைக்கலாம்.

எழுத்தாளர்கள் பக்கத்தில் எஸ்ரா இவ்வுலகம் நாடகத்தில் இயங்கியது என ஒரு கட்டுரையைத் தருகிறார். சென்னையில் நாடக அரங்குகள் இருப்பதையும் அது எப்பொழும் ஹவஸ்புல்(பார்த்திபன் படம் பார்த்திருக்கீங்களா) காட்சிகளாகவே இருக்கும் என்பதையும், தான் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்ததையும் பதிவு செய்கிறார். 75 ஆண்டுகளுக்கு முன் 275 நாடக அரங்குகள் இங்கு இருந்ததாக குறிப்பிடுகிறார். தற்பொழுது அறிஞர் சிவத்தம்பியின் கதைப்பு மாணவரான பார்த்திபராஜா அவர்கள் இப்பட்டறையில் தொடர்ந்து இயஙகி வருவதை பதிவு செய்கிறார். பார்த்திப ராஜா காரைக்குடியில் தங்கி நாடக நடிகர்களின் வாழ்க்கையையும் சொற்பதங்களையும் இடையூறுகளையும் களாய்வு செய்து அவ்வப்போது சிற்றிதழ்களில் பதிவு செய்து நூலாக்கினார். முருகபூபதி கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இரு அண்ணன்களான ச.தமிழ்ச்செல்வம் மற்றும் கோணங்கி இருவரும் இலக்கிய நுட்பவியலாளர்கள் ஆகையால் அவர் திறன் குறித்து நான் இங்கு கதைக்க வேண்டியதில்லை.

எஸ்ரா நாட்டுப்புறத் தங்கம் ஓம் முத்துமாரி குறித்து ஒரு சிறு பதிவைத் தந்திருந்தாலும் அதன் நாலுவரி நம்மினமென்ன மொத்த மனித இனத்தையும் கட்டிப் போடும்

வறுமைக்கு மாமன் முறை/சிறுமைக்குத் தம்பி முறை/பொறுமை நமக்கு அண்ணன் முறை/பசியும் பட்டினியும் நமக்கு பிள்ளைகள் முறை...நீங்களும் பாடுங்கள் மக்களே... பாடலில் மட்டும் அவர் நேர்மை காக்கவில்லை அவரது வாழ்கையிலும்தான் மக்கா

ஒரு கோமாளியின் கதையில் அற்புதமான ஒரு குழந்தையின் சொற்பதத்தை முதியோருக்கும் தான் பொருத்துகிறார். முகம் கழுவினால் கனவுகள் மறந்து போகும் அழிந்து போகும் மறைந்து போகும் என்கிற சொற்கள் குழந்தைகள்  தெருவில் விளையாடும் போது அதிகமாக பயன்படுத்தும் சொற்கள். சிவரமணியின் கவிதை ஒன்று *எங்கள் குழந்தைகள் யுத்தத்தில் வளர்ந்தவர்களாகி விடுகின்றனர் என்றும், எதிர்கால பயமுற்று எங்கள் குழந்தைகள் வெள்ளையாகவே சிரிக்கிறார்கள் என்றும் கதைத்திருப்பார்.என் மகன் விமானத்தை நோக்கி இன்னும் கல்லெறிந்து கொண்டிருக்கிறான் அவனோடு விளையாடியவனை  கொன்றதற்காக அந்த விமானத்தை எதிர்த்து...

ஷோபாசக்தியின் யானைக்கதை படிப்பவர்கள் குழந்தைகளாக இருக்கலாம். ஆய்வாளராக, அறிஞர் பேராசிரியர்களாக இருக்கலாம் என நினைத்துக் கொள்வார்கள் அந்த நிமிடத்தில். அப்படிப்பட்ட அளவான சிறுகதையை நான் இதுவரை படித்ததில்லை. யானையைப் பார்க்காத ஷோபா தாய்லாந்தில் இருந்த போது பார்த்திருக்கலாம். வாழ்வற்கே போராடும் காலத்தில் எதைத் தேடி அலைவது என ஒரு கையெழுத்து சஞ்சிகையை நடத்துகிறார் ஆனால் அதில் யானைக்கதையை எழுதும் அளவுக்கு இடமில்லாததால் அப்பொழுது அவர் அக்கதையை எழுதாமல் தற்பொழுது அவரே யானை போன்று பருத்தவுடன் மற்றவர்களின் கிண்டலில் யானைக்கதையை எழுதி யானை தன் துதிக்கையை ஆட்டுவதைப் போல தன் முடியை ஆட்டும் விதமாக வளர்த்துக் கொண்டார் போல. இவருக்கு யானைக் கோபம் வரும் என்பதை வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியை நாஜி பேக்கரி என வர்ணித்துவிட்டார். மென்மைக் கோபமென்றால் தூற்று. கொம் என்கிற பெமரில் நடராஜர்களை வரிசைப்படுத்தி எவன்டா என்னை எழுதின நடரோசக்காரன் நான் ரோசபக்ஜே ஊருலேயே தலைகீழா இருந்தவண்டா என்பார். அதுல அவரு சொல்லாத நடராஜன் ஜெயந்தி நடராஜன் மட்டுந்தான் ஏண்டா அவரு ராசுக்காந்திக்கு நெருக்கம்.

கரந்தை ஜெயக்குமார் பதிவில் ஒரு கவிதைத் தொகுப்பின் விமர்சனம் அருமை நீங்கள் ஒரு குயர் நோட்டில் எழுதி வைக்கலாம். ஞானக்கூத்தன் கவிதை ஒன்று *எதைக் கேட்டாலும் தெரியாது என்பவன் கவிதை எழுதத் தெரியுமா என்றால் 2 ஒரு குயர் நோட்டை எடுத்து நீட்டுவானாம். ஆனால் நீங்கள் இது போன்ற கவிதைகளை எழுதி வைத்து படித்ததில் பிடித்தது என நீட்டலாம். பதிவில் *ஒருவனை படிக்க வைக்க இன்னொருவன் வேலைக்குப் போகனும் என விரிவும் ஆழமும் தேடிய வினாவின் நீட்சியாய் மற்ற கவிதைகளும்.

சுவனப்பிரியன் பதிவில் குட்டி வரலாறு எதுவும் மாறவில்லை அளவான சிறுகையைய் போல ஒரு அளவான தகவலைச் சொல்லும் கிளிப்பிங்ஸ் கட்டுரை. பல மன்னர்களின் மரணத்தை நாட்டில் ஏதோ ஒரு குழப்பங்காரணமாக ஏற்பட்ட பிரச்சனையால் மன்னார் கொல்லப்பட்டார். ஷோபாசக்தியின் காமினி பாஸ் தவறு செய்துவிட்டார் என்கிற கட்டுரை இலங்கை அரசின் அடக்குமுறையை எதிர்த்த ஜேவிபியின் மன்னம்பெரியின் கடைசிச் சொற்கள் என அக்கட்டுரையின் தலைப்பு குறித்து விளக்கியிருப்பார். ஆனால் பின்னூட்டவாதிகள் காமினி பாஸ் குழப்பி விட்டார் என்பதே அவரின் கடைசிச் சொற்கள் எனச் சொல்வதை ஷோபாவும் ஒத்துக் கொள்கிறார். காந்தியாரின் கடைசிச் சொற்கள்/காந்தியாரின் கடைசி  200நாட்கள். நேதாஜியின் இறுதி வார்த்தைகள் யாருடன்/ஹிட்லரின் கடைசி நிமிடங்கள் இவை எல்லாம் கதைப்பாங்காகவே இனிமேலும் நமக்கு கிடைக்கக் கூடியவை. 

பாட்டி சொல்வாள் என்கிற பதிவில் 24மணிநேரமும் நாம் எப்படி இருக்க வேண்டும் என 24 வரியில் ஔவை ஆத்தியைப் போல தருகிறார். இதற்கு நம்மாளுக கணினி மொழியைக் கூடத் தருவார்கள். *நீரால் கோலம் போடாதே! *நெற்றியைக் காலியாய் விடாதே!

புத்தகசாலை என்கிற பதிவில் சிறையில் தன்னிடமிருந்து விடை பெறும் ஒருவனுக்கு தன் கையால் தைத்த செருப்பைத் தருகிறார். அவரோ கனகச்சிதமாக என் காலுக்கு சரியான செருப்பை எப்படி தைத்தித்தீர்கள் எனக் கேட்கிறார். காந்தியாரோ என் நெஞ்சில் நீங்கள் எட்டி உதைத்தது ஆழமாகவே இருப்பதாக பித்தானைக் கழட்டி நெஞ்சைக் காட்டுகிறார். பாண்டிச்சேரி எழுத்தாளர் ஒருவர் செருப்பு குறித்த இலக்கியப் பதிவுகளைத் சேகரித்தார். நூலாக்கி இருக்கலாம். நீங்களும் தேடிப்பாருங்கள். சட்டசபையின் முதல் ஆயுதமே செருப்புத்தான். சண்டை மற்றும் செல்லச்சண்டையில் மெச்சுக் கொல்லும் வார்த்தையாக செருப்பு சிம்மாசனமிடுகிறது. அண்ணா ஒரு குட்டிக் கதையில் ஒரு ஓவியனின் வரைதலை கடந்து செல்லும் செருப்பு தொழிலாளி செருப்பு குறித்து திருத்தம் சொல்வார். மற்றொரு திருத்தத்தைச் சொல்லும் போது உன் திருத்தம் முடிந்தது மற்றவரை நீ திருத்தாதே அது வேறொருவரின் வேலை என்பது போல அந்தக் கதை முடியும்.நம் சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிக்கு தடை விதிப்பது போல செருப்படிக்காட்சிக்கும் தடை விதித்தால்...

மீன்டும் இம்மாத இறுதியில் கடைசிச் சொற்களின் கட்டுரையைப் போல சந்திப்போம்.

-தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

Comments

Friday, March 5, 2021

குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்தும் திறனாய்வுப் போட்டி

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ உலகாவிய அளவில் ஒரு  திறனாய்வுப் போட்டியை அறிவித்திருக்கிறது.

இந்தப் போட்டிக்கான உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்க கடைசி நாள் ஏப்ரல், 30, 2021. போட்டி குறித்த மற்ற மேலதிக விவரங்கள் கீழே.