Sunday, March 14, 2021

தமிழ்ச்சரம் - தேர்ந்தெடுத்த படைப்புகள்- March 14, 2021

தேர்ந்தெடுத்த படைப்புகள்:

கரந்தை ஜெயக்குமார் 07/02/21, கூடு திரும்புதல்

சுவனப்பிரியன் 12/02/21 , குட்டி வரலாறு-எதுவும் மாறவில்லை

Neer kondae Entammal Venkudusamy Naidu 13/02/21, பாட்டி சொல்வாள்

புத்தகசாலை 13/02/21, மாமனிதம்

வணக்கம்,

ஏன் தேர்ந்தேடுத்தேன்?

கடந்த 10நாட்களாக இவ்விணையத்திற்குள் நல்லருமருந்துப் படைப்புகள் கிடைக்கும் எனத் தேடிய போது தகவல் பதிவுகளாகவும் விரல்கள் இல்லாத பதிவுகளாகவும் இருந்தன என்கிற போது பாடசாலை பொத்தகத்தில் உள்ள வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்கிற மனித உயர்வரியைப் படித்து என்ன பயன்.

*மூலதனம் என்கிற நூலை எழுதிய தியாகு மூலதனமே இல்லாமல் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்

எந்த வருமானமும் இன்றி தாலியை அடகு வைத்து பொத்தகம் போட்ட சாரு நிவேதிதா எழுதிக்கொண்டு தான் இருக்கிறார். 

எழுத்தே என் வாழ்வும் வருமானமும் என்கிற எஸ்ரா நாள்தோறும் எழுதுகிறார். என் பசியைப் போக்க இரண்டு ரூபாய் கொடுக்க இச்சமுகத்தில் யாருமில்லை ஒரு பாதசாலைக்காரனைத் தவிர ஆனால் நான் உங்களுக்காகத் தான் எழுதுகிறேன். நான் பாதசாலை மனிதர்களின் இரசிகன் பாடகன் போதகன் ஆனால் நீங்கள் பாடசாலை மனிதர்கள்.

உழைப்பு, வயிறும் வாயும் உண்ணும் பொருளாதாரம் மட்டும் அல்ல நூற்களை உண்ணும் பொருளாதாரமும் கூட  நம் கதை சொல்லும்  பருக்கை நிலவுக்கு மட்டுமா சொந்தம் அவை நினைவுகளுக்கும் சொந்தமல்லவா

தேர்தல் காலம் கொரானாவை பின்னுக்குத் தள்ளி இருந்தாலும் நம் நடையை வாகனத்தில் ஏற்றிச் செல்ல நாம் மறப்பதில்லை. நொடங்கிய இடத்தில் சீரகம் மடித்த ஒரு புத்தகத் தாளில் என்ன இருக்கிறது என நாம் படிப்பதில்லை.. ஓஹோ... அதை ஞெகிழிக் கைப்பற்றி ரொம்ப நாளாச்சு என எதிர்க்கதை சொல்பவர்கள் ஏராளம்.

எழுதுவதால் கொல்லப்படலாம் என்கிற அச்சத்தை மீறி எழுதுபவர்களுக்கு மத்தியில் நாம் வாழவில்லை. அப்படியான சம்பவங்களையும் நாம் கையிலெடுக்க துணிந்தவர்களும் அல்ல. நம் தடை நூல்கள் எல்லாமே என் ஜாதியைக் கேவலப்படுத்தி விட்டான் என்பதைத் தாண்டி வேறொன்றுமில்லை.

பாடசாலை நூல்களை படிக்க குழந்தைகளுக்கு நேரமில்லை. விளையாடவும் நேரமில்லை என முரண்பட்ட உலகில் இலவச தேர்ச்சி சமூகத்தை குதுகளிக்க வைக்கிறது. தேர்வில்லா தேர்ச்சியில் இருக்கும் மகிழ்ச்சி தேர்தலில்லா தேர்ச்சியில் இருக்கும் என நீங்கள் கனவுகாணக் கூடாது. ஆனால் அதன் மைய இருப்பை நோக்கி அரசியல் அபிலாஷைக் கொலைஞர்கள் நகருகிறார்கள். அதன் உறுப்புதான் ஆண்ட கொடியர்களின் இத்தேர்தல்.   

நோயுற்ற மனிதன் வாசித்தால் உடல் சீராகும் என மூளை நரம்பியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால் நோயாகவும் நோயற்றவர்களாகவும் அச்சத்துடன் அவரவர் அறைகளில் நொடங்கிய போதுகூட ஒரு நூலை வாங்கி வாசிப்போம் என்கிற இருத்தலை தொலைத்த உலகைக் காண்கிறோம். 

ஒரு படைப்பு தேறுமென்றால் அதை உதய சூரியனென்று சொல்லலாம். இரண்டு படைப்பு தேறுமென்றால் அதை இரட்டை இலை என்று சொல்லலாம். மூன்று படைப்பென்றால் அதை முரசு என்று சொல்லலாம்(கொட்டு 1 குச்சி 2) நான்கு படைப்பென்றால் நாலு கையோ ஐந்து கையோ இணைந்த மக்கள் நீதி மையத்தைச் சொல்லலாம். உணவே இல்லாமல் ஒருவன் எழுதிக் குவித்திருந்தால் முரசரைந்து சூரிய வெளிச்சத்தில் இலையைப் போட்டு விசிலடித்து குக்குர் சோற்றைப் போட்டு பருக்கை நூலை பக்கத்தில் வைக்கலாம்.

எழுத்தாளர்கள் பக்கத்தில் எஸ்ரா இவ்வுலகம் நாடகத்தில் இயங்கியது என ஒரு கட்டுரையைத் தருகிறார். சென்னையில் நாடக அரங்குகள் இருப்பதையும் அது எப்பொழும் ஹவஸ்புல்(பார்த்திபன் படம் பார்த்திருக்கீங்களா) காட்சிகளாகவே இருக்கும் என்பதையும், தான் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்ததையும் பதிவு செய்கிறார். 75 ஆண்டுகளுக்கு முன் 275 நாடக அரங்குகள் இங்கு இருந்ததாக குறிப்பிடுகிறார். தற்பொழுது அறிஞர் சிவத்தம்பியின் கதைப்பு மாணவரான பார்த்திபராஜா அவர்கள் இப்பட்டறையில் தொடர்ந்து இயஙகி வருவதை பதிவு செய்கிறார். பார்த்திப ராஜா காரைக்குடியில் தங்கி நாடக நடிகர்களின் வாழ்க்கையையும் சொற்பதங்களையும் இடையூறுகளையும் களாய்வு செய்து அவ்வப்போது சிற்றிதழ்களில் பதிவு செய்து நூலாக்கினார். முருகபூபதி கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இரு அண்ணன்களான ச.தமிழ்ச்செல்வம் மற்றும் கோணங்கி இருவரும் இலக்கிய நுட்பவியலாளர்கள் ஆகையால் அவர் திறன் குறித்து நான் இங்கு கதைக்க வேண்டியதில்லை.

எஸ்ரா நாட்டுப்புறத் தங்கம் ஓம் முத்துமாரி குறித்து ஒரு சிறு பதிவைத் தந்திருந்தாலும் அதன் நாலுவரி நம்மினமென்ன மொத்த மனித இனத்தையும் கட்டிப் போடும்

வறுமைக்கு மாமன் முறை/சிறுமைக்குத் தம்பி முறை/பொறுமை நமக்கு அண்ணன் முறை/பசியும் பட்டினியும் நமக்கு பிள்ளைகள் முறை...நீங்களும் பாடுங்கள் மக்களே... பாடலில் மட்டும் அவர் நேர்மை காக்கவில்லை அவரது வாழ்கையிலும்தான் மக்கா

ஒரு கோமாளியின் கதையில் அற்புதமான ஒரு குழந்தையின் சொற்பதத்தை முதியோருக்கும் தான் பொருத்துகிறார். முகம் கழுவினால் கனவுகள் மறந்து போகும் அழிந்து போகும் மறைந்து போகும் என்கிற சொற்கள் குழந்தைகள்  தெருவில் விளையாடும் போது அதிகமாக பயன்படுத்தும் சொற்கள். சிவரமணியின் கவிதை ஒன்று *எங்கள் குழந்தைகள் யுத்தத்தில் வளர்ந்தவர்களாகி விடுகின்றனர் என்றும், எதிர்கால பயமுற்று எங்கள் குழந்தைகள் வெள்ளையாகவே சிரிக்கிறார்கள் என்றும் கதைத்திருப்பார்.என் மகன் விமானத்தை நோக்கி இன்னும் கல்லெறிந்து கொண்டிருக்கிறான் அவனோடு விளையாடியவனை  கொன்றதற்காக அந்த விமானத்தை எதிர்த்து...

ஷோபாசக்தியின் யானைக்கதை படிப்பவர்கள் குழந்தைகளாக இருக்கலாம். ஆய்வாளராக, அறிஞர் பேராசிரியர்களாக இருக்கலாம் என நினைத்துக் கொள்வார்கள் அந்த நிமிடத்தில். அப்படிப்பட்ட அளவான சிறுகதையை நான் இதுவரை படித்ததில்லை. யானையைப் பார்க்காத ஷோபா தாய்லாந்தில் இருந்த போது பார்த்திருக்கலாம். வாழ்வற்கே போராடும் காலத்தில் எதைத் தேடி அலைவது என ஒரு கையெழுத்து சஞ்சிகையை நடத்துகிறார் ஆனால் அதில் யானைக்கதையை எழுதும் அளவுக்கு இடமில்லாததால் அப்பொழுது அவர் அக்கதையை எழுதாமல் தற்பொழுது அவரே யானை போன்று பருத்தவுடன் மற்றவர்களின் கிண்டலில் யானைக்கதையை எழுதி யானை தன் துதிக்கையை ஆட்டுவதைப் போல தன் முடியை ஆட்டும் விதமாக வளர்த்துக் கொண்டார் போல. இவருக்கு யானைக் கோபம் வரும் என்பதை வாசு முருகவேலின் ஜெப்னா பேக்கரியை நாஜி பேக்கரி என வர்ணித்துவிட்டார். மென்மைக் கோபமென்றால் தூற்று. கொம் என்கிற பெமரில் நடராஜர்களை வரிசைப்படுத்தி எவன்டா என்னை எழுதின நடரோசக்காரன் நான் ரோசபக்ஜே ஊருலேயே தலைகீழா இருந்தவண்டா என்பார். அதுல அவரு சொல்லாத நடராஜன் ஜெயந்தி நடராஜன் மட்டுந்தான் ஏண்டா அவரு ராசுக்காந்திக்கு நெருக்கம்.

கரந்தை ஜெயக்குமார் பதிவில் ஒரு கவிதைத் தொகுப்பின் விமர்சனம் அருமை நீங்கள் ஒரு குயர் நோட்டில் எழுதி வைக்கலாம். ஞானக்கூத்தன் கவிதை ஒன்று *எதைக் கேட்டாலும் தெரியாது என்பவன் கவிதை எழுதத் தெரியுமா என்றால் 2 ஒரு குயர் நோட்டை எடுத்து நீட்டுவானாம். ஆனால் நீங்கள் இது போன்ற கவிதைகளை எழுதி வைத்து படித்ததில் பிடித்தது என நீட்டலாம். பதிவில் *ஒருவனை படிக்க வைக்க இன்னொருவன் வேலைக்குப் போகனும் என விரிவும் ஆழமும் தேடிய வினாவின் நீட்சியாய் மற்ற கவிதைகளும்.

சுவனப்பிரியன் பதிவில் குட்டி வரலாறு எதுவும் மாறவில்லை அளவான சிறுகையைய் போல ஒரு அளவான தகவலைச் சொல்லும் கிளிப்பிங்ஸ் கட்டுரை. பல மன்னர்களின் மரணத்தை நாட்டில் ஏதோ ஒரு குழப்பங்காரணமாக ஏற்பட்ட பிரச்சனையால் மன்னார் கொல்லப்பட்டார். ஷோபாசக்தியின் காமினி பாஸ் தவறு செய்துவிட்டார் என்கிற கட்டுரை இலங்கை அரசின் அடக்குமுறையை எதிர்த்த ஜேவிபியின் மன்னம்பெரியின் கடைசிச் சொற்கள் என அக்கட்டுரையின் தலைப்பு குறித்து விளக்கியிருப்பார். ஆனால் பின்னூட்டவாதிகள் காமினி பாஸ் குழப்பி விட்டார் என்பதே அவரின் கடைசிச் சொற்கள் எனச் சொல்வதை ஷோபாவும் ஒத்துக் கொள்கிறார். காந்தியாரின் கடைசிச் சொற்கள்/காந்தியாரின் கடைசி  200நாட்கள். நேதாஜியின் இறுதி வார்த்தைகள் யாருடன்/ஹிட்லரின் கடைசி நிமிடங்கள் இவை எல்லாம் கதைப்பாங்காகவே இனிமேலும் நமக்கு கிடைக்கக் கூடியவை. 

பாட்டி சொல்வாள் என்கிற பதிவில் 24மணிநேரமும் நாம் எப்படி இருக்க வேண்டும் என 24 வரியில் ஔவை ஆத்தியைப் போல தருகிறார். இதற்கு நம்மாளுக கணினி மொழியைக் கூடத் தருவார்கள். *நீரால் கோலம் போடாதே! *நெற்றியைக் காலியாய் விடாதே!

புத்தகசாலை என்கிற பதிவில் சிறையில் தன்னிடமிருந்து விடை பெறும் ஒருவனுக்கு தன் கையால் தைத்த செருப்பைத் தருகிறார். அவரோ கனகச்சிதமாக என் காலுக்கு சரியான செருப்பை எப்படி தைத்தித்தீர்கள் எனக் கேட்கிறார். காந்தியாரோ என் நெஞ்சில் நீங்கள் எட்டி உதைத்தது ஆழமாகவே இருப்பதாக பித்தானைக் கழட்டி நெஞ்சைக் காட்டுகிறார். பாண்டிச்சேரி எழுத்தாளர் ஒருவர் செருப்பு குறித்த இலக்கியப் பதிவுகளைத் சேகரித்தார். நூலாக்கி இருக்கலாம். நீங்களும் தேடிப்பாருங்கள். சட்டசபையின் முதல் ஆயுதமே செருப்புத்தான். சண்டை மற்றும் செல்லச்சண்டையில் மெச்சுக் கொல்லும் வார்த்தையாக செருப்பு சிம்மாசனமிடுகிறது. அண்ணா ஒரு குட்டிக் கதையில் ஒரு ஓவியனின் வரைதலை கடந்து செல்லும் செருப்பு தொழிலாளி செருப்பு குறித்து திருத்தம் சொல்வார். மற்றொரு திருத்தத்தைச் சொல்லும் போது உன் திருத்தம் முடிந்தது மற்றவரை நீ திருத்தாதே அது வேறொருவரின் வேலை என்பது போல அந்தக் கதை முடியும்.நம் சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிக்கு தடை விதிப்பது போல செருப்படிக்காட்சிக்கும் தடை விதித்தால்...

மீன்டும் இம்மாத இறுதியில் கடைசிச் சொற்களின் கட்டுரையைப் போல சந்திப்போம்.

-தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

Comments

No comments:

Post a Comment