Friday, August 13, 2021

இளம்பிறை விருது - பரிசுத்தொகை ரூ.20 ஆயிரம்

 சிறந்த தமிழ்க் கவிதைக்கு கலைஞன் பதிப்பகம் வழங்கும் இளம்பிறை விருது



Thursday, July 22, 2021

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழ் விழா (2021) மலருக்கு உங்கள் படைப்புக்கள்

தடுப்பூசிக்குப் பின் தற்போது  அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பெட்னா-வின் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டுவிழா (FETNA-The Federation of Tamil Sangams in North America) வரும்   அக்டோபரில்  திட்டமிடப்பட்டிருக்கிறது . 

ஆமாம், 2021-ஆம் ஆண்டுக்கான 34-ஆம் பேரவை  விழா  அக்டோபர் 8-10 ஆகிய தேதிகளில் அட்லாண்டா மாநகரில் கோலாகலமாக நடக்க இருக்கிறது. அந்த விழா மலருக்கான படைப்புகள் உலகம் முழுவதிலும் இருந்து வரவேற்க்கப்படுகின்றன.  மேலதிக விவரங்கள் கீழே...

 

 


 
 

 


Monday, June 14, 2021

இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50 ஆயிரம் உதவித்தொகை

இந்தியாவின் கலாசாரம், பண்பாடு தொடர்பான படைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 75  இளம் எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் 50,000 ரூபாய் உதவித் தொகை (6 மாதங்களுக்கு) வழங்கும் திட்டம் ஒன்றை இந்திய அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது.


YUVA: Prime Minister’s Scheme For Mentoring Young Authors என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்திற்கு 30 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கவேண்டிய கடைசிநாள் ஜூலை 31, 2021.

மற்ற மேலதிக தகவல்கள் https://innovateindia.mygov.in/yuva/

Thursday, June 3, 2021

Feedburner இலிருந்து follow.it க்கு எப்படி மாறலாம் ?

Blogspot பயனாளர்கள்  பலர் கூகுள் நிறுவனத்தின்  ஃபீட்பர்னர் (Feedburner)  சேவையைப் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த  Feedburner சேவைப் பதிவர்களுடைய பதிவுகளைத் தானாக வாசகர்களுக்கு மின்னஞ்சல் செய்யும் வசதியைத் தந்து வந்தது.

இந்தச் சேவையால், பதிவர்களின் புதிய பதிவுகள் பல ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு  தானாக சென்று சேர்ந்தது. ஆனால், சமீபத்தில் கூகுள் ஃபீட்பர்னர் வழியாக வழங்கி வந்த இந்த மின்னஞ்சல் சேவையை நிறுத்திக் கொள்வதாக (feed burner is going away) சமீபத்தில் அறிவித்திருக்கிறது. (காலக்கெடு ஜூன் இறுதி 2021)

 

அதனால், இமெயில் வழியாக பல நூறு வாசகர்களைச் சென்றடைய மாற்று வழி தேடுவது அவசியதாகிறது.

இது குறித்து இணையத்தில் தேடியபோது இந்தச் சேவையை  தரமான முறையில் follow.it எனும் நிறுவனம் இலவசமாக செய்வதாக அறிந்தோம். 

 


விருப்பமுள்ளவர்கள் கிழே தரப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி  follow.it - இன் சேவையைப் பெறலாம்.

  Feedburner இலிருந்து follow.it க்கு எவ்வாறு மாறலாம் ?

1.முதலில் உங்களுடைய Feedburner கணக்கில் நுழையுங்கள் (www.feedburner.com) படம் கீழே

 


2. இந்தக் கணக்கில் இருந்து முதலில் உங்கள் மின்னஞ்சல் சந்தாதாரர்களுடைய மின்னஞ்சல் முகவரிகளைத் தரவிரக்கம் செய்ய வேண்டும்.  அதற்கு, சந்தாதரர்களின் எண்ணிக்கையைச் சொடுக்கவும் (click). மேலே உள்ள படத்தில் 17 (#). 

படம் கீழே

இப்போது CSV எனும் இணைப்பைச் சொடுக்கி வரும் ஃபைலைத் தரவிரக்கம் செய்து உங்கள் கணினியில் சேமியுங்கள். இந்த வாசகர்களின் முகவரிகளைத் தான்  follow.it தளத்தில் தரவேற்றம் செய்யவேண்டும். 

3. இனி, follow.it -இல் உங்களுடைய வலைதளத்தை பதிவு செய்யவேண்டும். அதற்கு முதலில் SignUp செய்யுங்கள். இதற்கு உங்களுடைய பழைய கூகுள் கணக்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.




4.  பிறகு, Publishing -> Add Feed -ஐ அழுத்தவும்


5. உங்களுடைய தளத்தின் முழு முகவரியைக் கொடுக்கவும். உதா. https://tamilcharamblog.blogspot.com/


அடுத்த பக்கம்..
 

6.  Continue-பொத்தானை அழுத்தும் போது,  வரும் மாதிரி வடிவத்தின் (design) நிறம், எழுத்துகள் போன்றவற்றைத் தேவைப்பட்டால் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.


7.  மீண்டும், Continue-பொத்தானை அழுத்தும் போது வரும் பக்கம் கீழே


 8.  இந்தப் பக்கத்தில் தரப்படும் HTML-ஐ பயன்படுத்தி உங்களுடைய வலைதளத்தில் புதிய கேஜெட் (gadget)-ஐ வடிவமைக்கலாம்.

உங்கள் வலைத்தளத்தின் -Layout-




 


 

 

 

9.   HTML/JavaScript-ஐ பயன்படுத்தி (Copy & Paste) , புதிய கேட்ஜெட் வடிவமைத்த பின், உங்களுடைய வலைத்தளம் (படம்), 

அதில் உங்களுடைய இமெயில் முகவரியைத் கொடுத்து, Subscribe-பொத்தானை அழுத்தி சோதனை செய்து பார்க்கலாம். அப்போது உங்களுடைய இமெயில் முகவரிக்கு follow.it , ஒரு Confirmation Email அனுப்பி இருப்பார்கள். (படம் கீழே)

 


 

அந்த இமெயில் Spam-போல்டருக்குச் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்


 

பிறகு இமெயிலை உறுதி செய்யவும். இனி, புதிய பதிவுகள் உங்களுடைய இமெயில் முகவரிக்குத் தானாகவே வந்தடையும்.

இந்த இமெயில் Subscribe வேலையை, மேலே நீங்கள் உங்களுடைய முகவரிக்குச் செய்தது போல.  நீங்கள் உங்களுடைய எல்லா வாசகர்களின் இமெயில் முகவரிக்கும் செய்யவேண்டும் (CSV) . பிறகு, மேற்கண்ட வாசகர்கள் தங்களுடைய இமெயிலுக்கு சென்று  follow.it -இல் இருந்து வந்த அந்த இமெயிலை உறுதிசெய்யவேண்டும்.

இவை  அனைத்தும் சரியாக செய்யப்பட்டால், நீங்கள் follow.it-இன் சேவையை பயன்படுத்தலாம்.

உதவி-Reference- https://follow.it/docs/publishers/getting-followers/how-can-i-switch-from-feedburner-to-follow-it

Saturday, May 22, 2021

ஸீரோ டிகிரி & தமிழரசி அறக்கட்டளை- பரிசுப்போட்டி (Novel)

ஸீரோ டிகிரி பதிப்பகமும் தமிழரசி அறக்கட்டளையும் இணைந்து 2021–ஆம் ஆண்டுக்கான நாவல் பரிசுப்போட்டியையும் , வாழ்நாள் சாதனையாளர் விருதையும் இணைந்து அறிவித்திருக்கிறார்கள்.

 கூடுதல் விவரங்கள் கீழே..

 

 


Sunday, April 25, 2021

தமிழ்ச்சரம் - தேர்ந்தெடுத்த படைப்புகள்- April 25, 2021

தேர்ந்தெடுத்த படைப்புகள்:

 


 

உலகம் யாவையும், 2021 ஏப்ரல், 14,  கவிதை ஒரு கைவல்லியம்

Rammalar’s Weblog, 2021 ஏப்ரல், 13, நெய்தல் நிலக்காரி – கவிதை

நாகேந்திர பாரதி, 2021 ஏப்ரல், 10, அழுக்கின் அழுக்கு - கவிதை

மின்னற் பொழுதே தூரம்,2021 ஏப்ரல், 14, சாதியை ஒழிக்கும் ஒரு கனவுத் திட்டம்

சிறகை விரிக்கும் சிந்தனைகள், 2021 ஏப்ரல், 14 , மண்டேலா

அக்னிச் சிறகு.... (வைசாலி செல்வம்), 2021 ஏப்ரல், 14, வாசிப்பது எப்படி ....?

சுருதி, 2021 ஏப்ரல், 12, வாசிப்பு  

தயாஜி வெள்ளைரோஜா, 2021 ஏப்ரல், 12, புத்தகவாசிப்பு_2021 எழிலிக்கு வேரின் சாயல்

ஏன் தேர்ந்தேடுத்தேன் ?  -தமிழ்த்தேசன் இமயக்காப்பியன் 


அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம். இப் படைப்புகள் அனைத்தும் ஒரு படைப்பாளனின் மனிதம் எவ்வாறு இருக்கிறது, இருக்க வேண்டும் என அழுத்தமாகச் சொல்கின்றன.

*கவிதை என்பது ஒரு நாடோடித்தவம்...எனத் தொடங்கி ஐந்து பிரிவுகளாக கவிதையை கவிதை என்றால் என்ன அதன் குணமென்ன என எளிய வார்த்தைகளைக் கொண்டு அம்பேத்காரியத்தை தொடுகிறார் வே.அருள்

*ச.விசயலட்சுமியின் கவிதைகள் மீராவின் கவிதைகள்+கற்பனைகள்= காகிதங்கள் என்கிற கவிதைத் தொகுதியில் வருவதைப் போன்ற எளிமையான வரிகளின் காத்திரம் மிளிர்வதைக் காணலாம். 

*பெண்ணடிமை அழுக்கிற்கு கல்வியின்மை காராணமாம் எனக் கேள்வி எழுப்பும் கவியாளர் அன்றாடப் பிழைப்பிற்கே வழியில்லாதவனிடம் சாதி எப்படி நிலை கொண்டது என்கிற கேள்வியை எழுப்புகிறார் நாகேந்தர பாரதி.

*ஒரு நாள் முதல்வர் முதல்வன் திரைப்படம் போல ஒரு ஓட்டுத் தேவைக்கு எங்களை அணுகவும் என்கிற காத்திரச் சொல் மூலம்  அமைந்திருக்கிறது பரிவை சே.குமார் அவர்களின் விமர்சனம்.

*சில புத்தகங்களை எழுதியவர்களுக்காகவே வாசிக்க வேண்டும் போல் இருப்பதில்லை. நம் கண் முன்னாலே அநியாயங்கள் பல செய்து, காறித்துப்ப வேண்டும் போல இருப்பவர்களின் – புத்தகங்கள் என்ன கனதியாக இருப்பினும் வாசிக்க வேண்டும் போல இருப்பதில்லை.

தொடர்வோம்...

Sunday, April 11, 2021

தமிழ்ச்சரம் - தேர்ந்தெடுத்த படைப்புகள்- April 11, 2021

தேர்ந்தெடுத்த படைப்புகள்:

அகத்தீ, 2021 ஏப்ரல், 8,  வெறும் பயணக் கதை அல்ல

மலாக்கா முத்துக்கிருஷ்ணன், 2021 ஏப்ரல், 11, இனிலா ரேடியோ மலேசியா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன், 2021 ஏப்ரல், 09, கெலிங் சொல்லுக்கு அனுமதி இல்லை

ஏன் தேர்ந்தேடுத்தேன் ?  -தமிழ்த்தேசன் இமயக்காப்பியன் 

வணக்கம்,

'வெறும் பயணக்கதை அல்ல' என்கிற நூல் விமர்சனப் பதிவை வாசித்த போது முழு நூலையும் வாசித்த உணர்வு உள்ளதாகவே நினைக்கிறேன். காஸ்ட்ரோ, குவேராவின் முன்னோடியான கொசே மார்த்தியின் எழுத்துகளும் நமக்கு பயன்படுபவையே. வால்காவிலிருந்து கங்கை வரை நூலைப் படைத்த ராகுல் பெருமகனின் எழுத்துகளும் பயண நூல்களின் வரிசையில் போற்றப்பட வேண்டிய நூற்கள்

 அதுபோல பயண நூற்களில் நடைபயண அனுபவங்களின் சேதிகள் நம்மையும் நடக்கச் சோல்லும். பூம்புகாரின் கண்ணகி காப்பிய நினைவு பண்டபம் அமைக்கப்பட்டதின் பின் ஒரு மனிதன் தன் வாழ் நாளெல்லாம் கண்ணகியை கண்டுபிடிக்க நடந்தவை.

பேராசிரியர் சி.கோவிந்தராசனார்

கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்து, இவ்வுலகிற்கு அறிவித்தப் பெருமைக்கு உரியவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களாவார்.

கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியே பயணித்து, பதினேழு ஆண்டுகள் நடந்து, கண்ணகி கோயிலைக் கண்டு பிடித்த ஆய்வாளர் இவர்.

கல்லூரிப் பணி  
 

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.

காவிரிப் பூம்பட்டிணம்

சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதன் பயனால், 1945 ஆம் ஆண்டு, மயிலாடுதுறை என்று, இன்று அழைக்கப்பெறுகின்ற, மாயுரம் சென்றார்.

மாயுரம் முழுதும் வாடகை மிதிவண்டியில் சுற்றி வந்து, விசாரித்த போது, காவிரிப் பூம்பட்டிணம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.

 பலமுறை முயன்று, கடற்கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும், செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங்காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று அழைக்கப்பட்ட பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டு பிடித்தார்.

அங்கிருந்த மீனவர்களின் துணையோடு, கட்டுமரத்தில் ஏறி, கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி இருந்ததைக் கண்டார். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக் கொண்டு, கடலுள் பயணிக்கும் பயிற்சி பெற்றிருந்த முழுக்காளிகள் சிலரை, கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு செய்தார்.

கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணாம்புக் காரைகள், பாசி படிந்த பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து தந்தனர்.

இவ்வாராய்ச்சியின் பயனாக, கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும், நிலப் பரப்பே காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

கோவலன் திடல்    

 1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கி, கால் நடையாகவே ஆராய்ந்தவாறு, நடந்த மதுரை வரை செல்வதற்கே, பன்னிரெண்டு ஆண்டுகள் தேவைப்பட்டன.

திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில், பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார்.

கண்ணகி கோயில்

பிறகு மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார்.

வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதைக் கண்டு கொண்டார்.


சிலப்பதிகார வழிகளின் படி, மதுரையில இருந்து, வையை ஆற்றின் தென் கரையை பின் பற்றி நடந்தார். சுமார் 40 மைலகளுக்கும் மேல் பயணித்த, சுருளி மலைத் தொடரை அடைந்தார்.

மேல் சுருளி மலையை அடைந்து ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதிசெய்தார். சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலை என்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னு ம்பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும், அருவியின் பெயரால் சுருளிமலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

சுருளி மலை த்தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.

வர்ஷ நாட்டின் மலை அடிவாரப் பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தேற்கே உள்ள கோயிலில் கல் வெட்டு ஒன்றினைக் கண்டுபிடித்தார்.

கி.பி.14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூசைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது.

கண்ணகிக்கு அடைக்கலம் தந்த பொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை, கவுந்தி அடிகள், இடையர் குல மகளான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது.

1963 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள், மங்கல தேவி மலையின் மேற்பரப்பிற்குச் சென்றார். கோரைப் புற்காடு எட்டடி உயரத்தற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது.

 200  அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில் மதிற்சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது.




செடி கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன.  இக்கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்தது.

 கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகானப் படிக்கட்டு. அதற்கு முன்னர் அரைகுறையாகக் கட்டப்பட்டு குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில், கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை.

சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்த இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள். மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.

உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலத காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை. அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுபுற மார்பு சிறிதாக இருந்தது.

பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.

இவ்வாறாக பதினேழு ஆண்டு கால அயரா உழைப்பிற்குப் பின், தேடலுக்குப் பின், பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகி சிலையினையும், கண்ணகி கோயிலையும் கண்டு பிடித்தார்.

கண்ணகி கோயிலை உலகிற்கு அறிவித்தல்

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், முதல் முதலில் கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றிய செய்தியை உலகிற்குத் தெரியப் படுத்தினார்.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்பு பற்றி, சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார்.

அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், இளங்கோவடிகள் சிலைத்திறப்பு விழாவின்போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனாரின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.


குடியரசுத் தலைவர் விருது

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் பணியினைப் போற்றும் வகையில், குடியரசுத் தலைவர் அவர்கள், 2013 ஆம் ஆண்டு தொல்காப்பியர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.



மறைவு

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தனது 94ஆம் வயதில்,  21.2.2015 அன்று இயற்கை எய்தினார்.

'மின்னல் வானொலி ' என்கிற பதிவை வாசிக்கிற போது அது படிக்காதவர்களின் புத்தகம் என்கிற கற்சொல் தான் என் ஞாபகத்திற்கு வந்தது. 


இன்று அனைவரின் கைகளிலும்(ஒருவருக்கு மூன்று கூட உண்டு)திறன்பேசி என்கிற கைத்தொலைக்காட்சி பரவிக் கிடக்கிறது. அதில் பாடல்களை பதிந்து கேட்பது இன்று நடக்கிறது. டூரிங் டாக்கிஸ் என்கிற பெயரில் பல பன்பலைகளில் திரைப்பட கதை வசனங்களை ஒலிபரப்புவது இன்றும் நடக்கிறது. தொலைவுப் பேருந்துகளில் தொலைக்காட்சியை அப்புறப்படுத்தி விட்டு அவ்விடத்தை மறுபடியும் வானொலி கைப்பற்றிக் கொண்டதை நாம் மகிழ்வுடன் வரவேற்றுள்ளோம். போர்க்காலங்காலங்களில் சேதி கேட்க துவியைப் பயன்படுத்தி வானொலி கேட்ட கதையை அக்கால போர்த்தளிர்களிடமும் அகதித் தளிர்களிடமும் கேட்கலாம். விடுதலைப் போராட்ட வரலாற்றில் வானொலிக் குரலாகவும் காட்சிக் குரலாகவும்  ஒலித்த எங்கள் தாய் இசைப்பிரியாவின் குரல் காற்று தமிழீழமென்றே உச்சரிக்கும் என்கிற சேரனின் வலிமை வரியைப் போல என்றும் இசையருவியின் குரல் ஒலிக்கும் எங்கள் செவிகளில்.

வானொலியின் மற்றொரு பெயர் சிலோன் என்கிற அளவிற்கு சிலோன் வானொலி நம் நெஞ்சங்களில் நிறைந்தவை. பீகாரில் ஒரு தனி நபர் எந்த அரசின் அனுமதியின்றியும் ஒரு வானொலி நிலையத்தை அமைத்தார். பிறகு அதை அரசப்படைகள் இவ்லாமல் செய்தனர். அந்தளவுக்கு வானொலிக் காதல் நம் அனைவருக்கும் உண்டு. வானொலி ஓடும் வீடு நாம் தேடும் நபர் வீடு என இப்படி என்னைக் கைது செய்த கதை உண்டு. இந்திய விடுதலை/வியத்நாம் விடுதலை(ட்ராய்) மலேசிய விடுதலை(கணபதி) ஆகியவற்றில் வானொலியின் பங்கு என தேடினால் நிறையக் கதைகள். அரியலூர் மாங்காய் பிள்ளையார் கோவில் தெரு அருகில் கண்ணன் துணியகக் கடை அருகில் ஒரு பெண் மருத்துவரின் பெயர் வானொலி. அவ்வூரின் குடந்தை எல்லையில் தென்கச்சி என்கிற ஊரில் யார் வானொலி பிரபலம் என நான் சொல்ல வேண்டியதில்லை. ஆம்! நம் காலத்தின் கதை சொல்லி தென்கச்சி சுவாமிநாதனே அவர். மற்றொரு நபர் பூர்ணம் விஸ்வநாதன்.

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை ஆல் இந்தியா வானொலியின்  தமிழ்ச் செய்தியில் முதன் முதலில் கிழக்காசிய நாடுகளுக்கு அறிவித்த பெருமை இவருக்கு உண்டு

இனிய உதயம் நேர்காணலில் தென்கச்சியாரிடம் வாசகர்கள் கண்கலங்குமாறு ஒரு கதை சொல்லுங்கள் என்ற போது *ஈழத்தமிழர்கள் என்கிற ஒற்றைச் சொல்லோடு தனது நேர்காணலை முடித்துக் கொண்டார். இனிமேல் இப்படி ஒரு பதிலை யாராலும் சொல்ல முடியாது. தேடலின் கதைக்காரர்கள் என்றும் அசௌரியமான பதிலைச் சொல்ல மாட்டார்கள் என்பதற்கு தென்கச்சியாரின் இப்பதிலே உதாரணம்.. மின்னல் பவள விழாவில் நாம் நூற்றாண்டு விழா கொண்டாடவும் வாழ்த்துவோம்.

 மீண்டும் அடுத்த  பதிவில் சந்திப்போம். நன்றியும் நல்வணக்கமும்

-தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்